கொரோனா தொற்று காரணமாக உலகம் முழுவதும் பல்வேறு தாக்கங்களை அனுபவித்தது.
கொரோனா தொற்று தாக்கத்தில் இருந்து இன்னும் முழுமையாக வெளிவராத சூழலில் சீனாவில் மீண்டும் ஒரு புதிய தொற்றுநோய் பரவி வருவதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளது.
இந்த புதிய வைரஸ் தாக்கத்தால் மருத்துவமனைகள் நிரம்பியுள்ளன, பிணவறைகள் நிரம்பி வழிகின்றன என்றும் கூறப்படுகின்றது.
இன்ஃப்ளூயன்ஸா ஏ, மைக்கோபிளாஸ்மா நிமோனியா மற்றும் hMPV (Human Metapneumovirus) எனப்படும் மர்மமான வைரஸ் உள்ளிட்ட பல வைரஸ் தொற்றுக் காரணமாக இந்த மோசமான நிலை ஏற்பட்டு வருகிறது.
அந்த வகையில், hMPV தொற்று குறித்து மேலதிக தகவல்களை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.
சீனாவில் கோவிட்-19 வைரஸ் தாக்கம்
சீனாவில் சுவாச நோய்கள் அதிகரித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. சீன அரசாங்கம் மற்றும் உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளதாக கூறப்படுகின்றது.
எந்தவிதமான அவசரகால நிலையை அறிவிக்கவில்லை என்றாலும் வைரஸ் பற்றிய வதந்திகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இப்போதைக்கு தொற்றுநோய் பரவும் ஆபத்தில் உலகம் முழுவதும் இல்லையென்றாலும் குறிப்பிட்ட சில இடங்களில் இருந்து வருகிறது.
புதிய தொற்றுநோயா?
குறிப்பிட்ட சில நாட்களுக்கு முன்னர் சீன வைத்தியசாலையில் இருந்து காணொளியொன்று வெளியாகியுள்ளது. அதாவது, சில பயனர்கள் நெரிசலான மருத்துவமனைகளைக் காட்டும் வீடியோக்களை பதிவிட்டுள்ளனர். அதில் புதிய வைரஸ் தொற்று பரவி வருவதாகவும் கூறப்படுகிறது.
ஆனால் இந்த பதிவை ஆதாரிக்கும் விதமாக சீன சுகாதார அதிகாரிகள் மற்றும் WHO ஆகிய இரண்டும் அத்தகைய நெருக்கடியை உறுதிப்படுத்தும் அதிகாரப்பூர்வ அறிக்கைகள் எதையும் வெளியிடவில்லை.
யாரெல்லாம் ஆபத்தில் உள்ளனர்?
HMPV தொற்று குழந்தைகள் மற்றும் வயதானவர்களை தாக்கும் வாய்ப்பு அதிகமாக உள்ளது. அத்துடன் நோயெதிர்ப்பு அமைப்பு பலவீனமாக இருப்பவர்களுக்கு ஏற்படலாம்.
சிலருக்கு நாள்பட்ட சுவாச பிரச்சினைகள் இருக்கும் இப்படியானவர்களுக்கு இந்த தொற்றின் தாக்கம இருக்கும்.
உங்கள் பக்கத்தில் யாராவது இருமல் அல்லது தும்மும் போது வெளியிடப்படும் நீர்த்துளிகள் மூலம் இந்த வைரஸ் பரவும். இதனால் நெரிசலான இடங்களுக்கு செல்வதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.