இயக்குனர் ஷங்கர் என்றாலே அவரது பிரம்மாண்ட படங்கள் தான் நினைவுக்கு வரும். எந்திரன், அந்நியன், சிவாஜி உட்பட பல பிரம்மாண்ட படங்கள் மூலமாக எல்லோரது கவனத்தையும் ஈர்த்தவர் அவர்.
தற்போது தெலுங்கில் அவர் ராம் சரணை வைத்து கேம் சேஞ்சர் என்ற படம் எடுத்து இருக்கிறார். அந்த படம் நீண்ட தாமதத்திற்கு பிறகு வரும் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகிறது.
கேம் சேஞ்சர் படம் தொடர்ந்து பல காரணங்களால் தள்ளிப்போய் வந்த நிலையில் தயாரிப்பாளருக்கு அதிகம் செலவு அதிகரித்ததாக கூறப்படுகிறது. ஷங்கர் இந்த படத்துடன் சேர்ந்து இந்தியன் 2 படத்தையும் இயக்கி வந்தது குறிப்பிடத்தக்கது.
அதனால் தற்போது ஷங்கர் கேம் சேஞ்சர் படத்திற்காக சம்பளத்தை குறைத்துக்கொண்டிருப்பதாக செய்தி வெளியாகி இருக்கிறார்.
இந்த படத்திக்காக அவர் 35 கோடி ரூபாய் மட்டும் சம்பளமாக பெற்று இருக்கிறார். அதே போல ராம் சரண் கூட சம்பளத்தை குறைத்துக்கொண்டு 65 கோடி ரூபாய் மட்டும் பெற்றதாக கூறப்படுகிறது.