கனடாவில் வங்கிக்கு தீ வைத்தவர்களுக்கு பொலிசார் வலை வீச்சு!

கனடாவில் வங்கி ஒன்றுக்கு தீ மூட்டிய நான்கு சந்தேக நபர்களை கைது செய்ய பொலிஸார் தேடுதல்களை ஆரம்பித்துள்ளனர்.

யோர்க் பிராந்தியத்தின் மார்க் பகுதியில் அமைந்துள்ள வங்கி ஒன்று தீ மூட்டப்பட்டிருந்தது.

கடந்த வாரம் இந்த சம்பவம் பதிவாகியிருந்தது. வங்கியின் வரவேற்ப்பறை பகுதியில் இந்த தீ பற்றி கொண்டிருந்தது என தெரிவிக்கப்படுகிறது.

தீயணைப்பு படையினர் விரைந்து செயல்பட்டு தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இதனால் எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

மீண்டும் தீ மூட்டப்பட்டதாகவும் அந்த சந்தர்ப்பத்திலும் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

கருப்பு நிற வாகனம் ஒன்றில் சென்ற நான்கு பேர், தீமூட்டல் சம்பவத்துடன் தொடர்பு பட்டிருந்தனர் என தெரிவிக்கப்படுகிறது.

அனைவரும் கருப்பு நிற ஆடை அணிந்தவர்கள் என தெரிவிக்கப்படுகிறது. சந்தேக நபர்கள் பற்றிய மேலதிக விபரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் ஏதேனும் தகவல்கள் இருந்தால் அறிவிக்குமாறு பொலிஸார் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.