பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் கேம் சேஞ்சர். இப்படத்தை தில் ராஜு தயாரித்துள்ளார்.
கியாரா அத்வானி, சுனில், அஞ்சலி, எஸ்.ஜே. சூர்யா, ஜெயராம், சமுத்திரக்கனி என நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடித்துள்ளனர். தமன் இசையில் உருவாகியுள்ள இப்படத்தில் 5 பாடல்கள் இடம்பெறுகிறது. இந்த 5 பாடல்களை எடுக்க ரூ. 75 கோடி செலவு ஆகியுள்ளது என தயாரிப்பாளர் தில் ராஜு கூறியிருந்தார்.
சமீபத்தில் இப்படத்தின் ட்ரைலர் வெளிவந்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. படத்தின் மீது இருந்த எதிர்பார்ப்பை ட்ரைலர் இன்னும் அதிகரித்துள்ளது என்று தான் சொல்லவேண்டும்.
ப்ரீ புக்கிங்
இந்த நிலையில், கேம் சேஞ்சர் திரைப்படத்தின் ப்ரீ புக்கிங் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இதுவரை ப்ரீ புக்கிங்கில் மட்டுமே ரூ. 7 கோடி வரை கேம் சேஞ்சர் படம் வசூல் செய்துள்ளது.