கனடாவில் மது போதையில் வாகனம் செலுத்தியவரின் கவனக்குறைவால் ஏற்பட்ட விபத்தில் 15 வயது சிறுவன் உயிரிழந்துள்ளான். ஒன்றாரியோவின் கிங்ஸ்டன் கிழக்கு பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
ஒன்றாரியோ மாகாண பொலிஸார் இந்த சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
வான் வண்டியொன்றை செலுத்தியவர் வீதியில் சென்ற சிறுவன் மீது வானை மோதியதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
வாகனத்தில் மோதுண்ட சிறுவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
57 வயதான சாரதி ஒருவரே இவ்வாறு மது போதையில் வாகனத்தைச் செலுத்தி விபத்தினை ஏற்படுத்தியுள்ளார்.
மருத்துவ பரிசோதனையின் போது சாரதி, அதிகளவான மது அருந்தியிருந்தமை கண்டறியப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் தகவல்கள் தெரிந்தால் அறிவிக்குமாறு பொலிஸார் பொதுமக்களிடம் கோரியுள்ளனர்.