சென்னை: நடிகர் விஷாலின் உடல்நிலையில் என்ன பிரச்சனை? வெறுமனே ஜூரம் மட்டுமே காரணம் இல்லை என்றும், அவரது இந்த நிலைமைக்கு சிலர் காரணமாக இருந்திருக்கிறார்கள் என்றும் மூத்த பத்திரிகையாளர் அந்தணன் பேட்டி ஒன்றில் வெளிப்படுத்தியிருக்கிறார். வலைப்பேச்சு அந்தணன் இதுகுறித்து வீடியோவில் பேசியிருக்கிறார்.. அதில், “விஷாலை கம்பீரமாக பார்த்த கண்கள், விஷாலை இப்படி பார்க்க வேண்டுமா? என்று அதிர்ந்து போயிருக்கிறார்கள். விஷாலுக்கு என்ன ஆச்சு என்று, எனக்கே பலரும் போனை போட்டு கேட்டு வருகின்றனர். விஷால் உள்ளபடியே கம்பீரமாக இருந்தவர். இதை நான் கண்ணெதிரே பார்த்திருக்கிறேன்.
உடல்நிலை: மலேரியா காய்ச்சலுடன் நிகழ்ச்சிக்கு வந்திருப்பதாக டிடி ரொம்ப அழகா மேனேஜ் செய்து சொல்லியிருந்தாலும்கூட, வெறும் மலேரியா ஜூரம் மட்டும் அதற்கு காரணம் இல்லை. அண்மைக்காலமாக விஷாலின் உடல்நிலை மோசமாக போய்க்கொண்டிருக்கிறது.. இதற்கு பலர் இங்கே காரணமாக இருந்திருக்கிறார்கள். விஷாலுக்கு யாரால் பாதிப்பு? விஷாலால் யாருக்கு பாதிப்பு? என்று பேச ஆரம்பித்தால் அது விவாதமாகிவிடும்.
முதல் காரணம் யார்? நம்ம வீட்டு பையன் போலவே இருக்கிறாரே என்று, “செல்லமே” படத்தில் உருவாக்கியவர் விஷால்.. மிக முக்கியமான 2 சங்கத்தின் படத்தின் பொறுப்பை ஏற்றவர். பல வெற்றிப்படங்களை தந்தவர். மிகப்பெரிய ஆக்ஷன் கிங்காக மாறியவர். விஜயகாந்த் விஷாலை ஆரம்பத்தில் பார்த்ததுமே சொன்ன வார்த்தை, மிகப்பெரிய ஆளாக வருவார் என்றார். இவ்வளவு வேகமாக வந்த விஷால், எங்கே தடுமாறி விழுந்தார்? டைரக்டர் பாலா: விஷால் ஒரு படுகுழியில் விழுந்துவிட்டார்.. இந்த நிலைமைக்கு காரணம், டைரக்டர் பாலாதான். அவன் இவன் படத்தில் மாறுகண் வேண்டும் என்பதற்காக, ஒருபுறம் முழியை இழுத்து தைத்துவிட்டார்கள். இதற்கு மருத்துவ பெயரை பல சொல்கிறார்கள். கண் அப்படி வைத்து கொண்டு நடிக்கிறாரோ என்று பலரும் நினைத்தார்கள். ஆனால், கண் அப்படி அவருக்கு மாற்றி அமைக்கப்பட்டிருந்தது.
டப்பிங் பேப்பரை கையில் எடுத்தால், கண் தானாகவே மாறிவிடும் என்று பாலாகூட ஒரு பேட்டியில் சொல்லியிருந்தார். இப்படி கண்ணை மாற்றியதுதான் விஷாலுக்கு தீராத ஒற்றை தலைவலியுடன் உண்டுபண்ணிவிட்டது. இந்த வலியை மறப்பதற்காக விஷால் அவர்கள் சில பழக்கங்களை கையில் எடுக்க ஆரம்பித்தார்.
2 நண்பர்கள்: நந்தா, ரமணா என்ற அவரது நெருங்கிய நண்பர்களும், விஷாலின் இந்த நிலைமைக்கு 2வது காரணமாகும். நடிகர் சங்கத்தில் பதவியை பிடிக்கணும் என்று தீவிரமாக விஷால் இறங்கியதற்கு காரணம் ஒன்று உள்ளது.. சரத்குமாரை வைத்து விஷாலின் அப்பா சில படங்களை தயாரித்தார். அப்போது சரத்குமாரால் தன்னுடைய அப்பாவுக்கு ஏற்பட்ட மனக்கசப்பை, சிறுவயதிலிருந்தே பார்த்து வந்துள்ளார் விஷால். ஒருகட்டத்தில் சரத்குமாரை பழிவாங்க முடிவெடுத்தார்.. இதை மனதில் வைத்தே, நடிகர் சங்கத்தில் ராதாரவியையும், சரத்குமாரையும் தோற்கடித்தார். அப்போது ஒட்டுமொத்த இளைஞர் கூட்டமும் விஷால் பக்கம் நின்றது. அந்த நேரத்தில் விஷாலிடம் வந்து சேர்ந்தவர்கள்தான் நந்தாவும் ரமணாவும். மனவேதனை: இவர்கள் 2 பேருமே, விஷாலை சுற்றி ஒருவிதமான வேலி அமைத்தனர். நெருங்கிய நண்பர்களைகூட விஷாலிடம் நெருங்க இவர்கள் விடவில்லை. இதனால் நல்ல முடிவுகள் எதையுமே விஷாலால் எடுக்க முடியாமல் போய்விட்டது.. விஷாலை வைத்து ஒரு படமும் நந்தாவும் ரமணாவும் எடுத்தார்கள்.. அந்த படத்தில் ஏற்பட்ட பிரச்சனைகளும், விஷாலுக்கு மன வேதனையை தந்துவிட்டது.
லைகா போன்ற நிறுவனத்தையும் விஷால் சரியாக டீல் செய்ய முடியவில்லை. கோர்ட் வரை விவகாரம் சென்றது.. லைகா நிறுவனத்துடன் முரண்பட்டதும், விஷாலுக்கு யாருமே பைனான்ஸ் செய்ய முன்வரவில்லை. இப்படி பல சிக்கல்களை அவராகவே தேடிக் கொண்டார். மனஉளைச்சல்: இது எல்லாவற்றுக்கும் மேலாக, நடிகர் சங்கம், தயாரிப்பாளர் சங்கத்தில் தினம் தினம் கட்டப்பஞ்சாயத்து போன்ற சூழலை ஏற்படுத்தவும், மனஉளைச்சல், டென்ஷன் தந்து, அவரது உடல்நிலைமை பாதித்துவிட்டது. இந்த இடத்தில் மிஷ்கினையும் சொல்ல வேண்டியிருக்கிறது. துப்பறிவாளன் 2 லண்டன் நடந்த ஷூட்டிங்கில், விஷாலுக்கும் மிஸ்கினுக்கும் ஏற்பட்ட சண்டை, நஷ்டம் போன்றவையும் விஷாலின் இந்த நிலைமைக்கு காரணம் என சொல்லலாம். பகிரங்கமாக 2 பேருமே மாறி மாறி திட்டிக் கொண்டார்கள். இந்த பிரச்சனைகளிலிருந்து மறப்பதற்கு விஷால் எடுத்த சில விஷயங்கள்தான் அவரை இந்த நிலைமைக்கு ஆளாக்கி விட்டது…
மனவேதனை: மார்க் ஆண்டனி படத்தின்போது, 2 நாளாகியும் கதவு திறக்கவில்லையாம் விஷால். உள்ளே சென்று பார்த்தால் தூங்கி கொண்டிருந்தாராம். அந்த அளவுக்கு உடல்நிலை மோசமாகியிருக்கிறது. எப்படி கம்பீரமாக இருந்த ஒரு நடிகன் இப்படி ஆகிவிட்டாரே என்று நினைக்கும்போது வருத்தமாக இருக்கிறது என்று அந்தணன் வேதனை தெரிவித்துள்ளார்.