இப்போதெல்லாம், முடி முன்கூட்டியே நரைப்பது ஒரு பொதுவான பிரச்சனையாகிவிட்டது. மாறிவரும் வாழ்க்கை முறை, தவறான உணவுப் பழக்கம், மாசுபாடு, மனஅழுத்தம், ரசாயனப் பொருட்களின் பயன்பாடு போன்ற காரணங்களால் பலரது தலைமுடி இளம் வயதிலேயே நரைத்து வருகிறது.
பெரும்பாலானோர் முடியை கருமையாக்க ஹேர் டை,ஹேர் கலர் போன்றவற்றை பயன்படுத்துகின்றனர். ஆனால் அவற்றில் தீங்கு விளைவிக்கும் இரசாயனங்கள் உள்ளன.
இவை முடியை சேதப்படுத்தும். அத்தகைய சூழ்நிலையில், உங்கள் தலைமுடியை கருமையாக்க சில வீட்டு வைத்தியங்களின் உதவியை நீங்கள் எடுத்துக் கொள்ளலாம். இதை எப்படி செய்யலாம் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
கூந்தலை கருப்பாக்க வீட்டு வைத்தியம்
தயிரில் சில பிரத்யேக பொருட்களைக் கலந்து தலைமுடியில் தடவி வந்தால், முடியின் வேர்களில் இருந்து கருமையடைவதற்குப் பெரிதும் உதவும். நரைத்த முடியை கருப்பாக்க, தயிரில் வெந்தய விதை மற்றும் நெல்லிக்காயை கலந்து தடவலாம்.
நிகோடினிக் அமிலம் வெந்தய விதைகளில் உள்ளது, இது முடி வளர்ச்சியை ஊக்குவிக்கிறது மற்றும் முடி நரைப்பதைத் தடுக்கிறது. அதே சமயம் நெல்லிக்காய் பொடியில் வைட்டமின் சி மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளது.
இது முடியை வலுப்படுத்தவும், கருமையாக்கவும் உதவுகிறது. இதற்கு கலக்கப்படும் வெந்தயத்தை ஊறவைத்து எடக்க வேண்டும். இந்த கலவையை உங்கள் உச்சந்தலையில் மற்றும் கூந்தலில் நன்கு தடவவும்.
இதன் பின்னர் தலைமுடியில் சுமார் 30-40 நிமிடங்கள் அப்படியே வைத்துவிட்டு பின்னர் லேசான ஷாம்பூ கொண்டு தலைமுடியைக் கழுவ வேண்டும். இதை வாரத்திற்கு 1 முதல் 2 முறை செய்தால் நல்ல பலன் பெறலாம். மேலும் முடி வளர்ச்சி நன்றாக இருக்கும்.