அமெரிக்காவின் வாஷிங்டன் மாகாணத்தில் உள்ள சியாட்டில் நகரில், ஆந்திர பிரதேச மாநிலம் கர்னுால் மாவட்டத்தைச் சேர்ந்த 23 வயதான ஜானவி கண்டூலா என்ற மாணவி பொலிஸ் ரோந்து வாகனம் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்து சம்பவம் 2024 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் இடம்பெற்றுள்ளது.
குறித்த வாகனத்தை கெவின் டேவ் என்ற பொலிஸ் அதிகாரி செலுத்தியுள்ளார். அவருடன் டேனியல் ஆடரெர் என்ற மற்றொரு பொலிஸ் அதிகாரியும் இருந்தார்.
விபத்துக்கு பின் சியாட்டில் பொலிஸ் சங்க தலைவரை தொலைபேசியில் அழைத்த அதிகாரி டேனியல் இது தொடர்பில் அவரிடம் தகவல் தெரிவித்தார்.
அப்போது மாணவி தொடர்பிலும் அந்த விபத்து குறித்தும் கேலியாக பேசி அவர் சிரித்துள்ளார்.
இந்த உரையாடல் பொலிஸ் அதிகாரி டேனியலின் உடம்பில் இருந்த கமராவில் பதிவான நிலையில், அந்த ‘ஆடியோ’ வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதனை தொடர்ந்து, இந்திய மாணவி விபத்தில் உயிரிழந்த பிறகு கேலி பேசிய பொலிஸ் அதிகாரி டேனியல் ஆடரெர் பணிநீக்கம் செய்யப்பட்டார்.
இதேவேளை தற்போது, விபத்து நடந்தபோது காவல்துறை வாகனத்தை ஓட்டிச் சென்ற கெவின் டேவ் என்ற காவலரை பணிநீக்கம் செய்து சியாட்டில் நகர இடைக்கால காவல்துறைத் தலைவர் ஸ்யூ ராஹர் உத்தரவிட்டுள்ளார்.