சவுதி அரேபியாவில் பெய்த கடும் மழையால் பல இடங்களில் வெள்ளம் தேங்கி காணப்படுகின்றது.
மெக்கா, மதீனா மற்றும் ஜெட்டா நகரகளில் பெய்த கனமழையால் சாலைகளில் வெள்ளம் தேங்கி போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
மேலும், அல்-ஷாஃபியா எனும் பகுதியில் 49.2 மிமீ மழையும் ஜெட்டாவின் அல்-பசதீன் பகுதியில் 38 மிமீ மழையும் மதீனாவின் நபிகள் நாயகம் பள்ளிவாசல் பகுதியில் 36.1 மிமீ மழையும் அதன் அருகில் உள்ள குபா மசூதியில் 28.4 மிமீ மழையும் பெய்துள்ளது.
மேலும் மெக்கா, மதீனா மற்றும் ஜெட்டா ஆகிய நகரங்களில் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
مندوب هنقرستيشن والحمد لله على السلامه ..⛈#مكه_الان#جده_الان pic.twitter.com/yB9DlvYP9v
— أخبار عاجلة .. (@newsnow7345) January 6, 2025