கடவுச்சீட்டு வழங்குவது பாரிய சவாலாக மாறியுள்ளது!

இலங்கையில் கடவுச்சீட்டு வழங்குவது சவாலாக மாறியுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

கடவுச்சீட்டுகளை கோரிய சிலருக்கு சுமார் ஐந்து மாதங்கள் தாமதம் ஏற்படுவதாகவும் அவர் கூறுகிறார்.

கடந்த ஆட்சியாளர்கள் எடுத்த தவறான முடிவின் விளைவே இதற்குக் காரணம் எனவும் அமைச்சர் கூறினார்.

எனவே அதனால் கடவுச்சீட்டை ஆர்டர் செய்து ஐந்தாறு மாதங்கள் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.