யாழ்பாணம் ஏ 9 பிரதான வீதியில் கோர விபத்து ஒருவர் பலி!

கொழும்பிலிருந்து வவுனியா நோக்கிப் பயணித்த பஸ் ஒன்று மோட்டார் சைக்கிள் ஒன்றுடன் மோதியதில் மோட்டார் சைக்கிள் செலுத்தியவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக மதவாச்சி பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்து யாழ்பாணம் ஏ 9 பிரதான வீதியில் மதவாச்சி வஹமல்கொல்லேவ பகுதியில் இன்று புதன்கிழமை (08) காலை இடம்பெற்றுள்ளது.

ஹமல்கொல்லேவ, ரம்பாவ பகுதியை வசிப்பிடமாகக் கொண்ட 56 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவரே உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவரின் சடலம் ரம்பேவ வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் விபத்து தொடர்பில் பஸ் சாரதியை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

மேலும் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மதவாச்சி பொலிஸ் நிலைய போக்குவரத்து பொலிஸ் பிரிவின் பொறுப்பதிகாரி உப பொலிஸ் பரிசோதகர் நிஸ்ஸங்க தலைமையிலான பொலிஸ் குழுவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.