ரஜினியின் கூலி பட அப்டேட் !

ரஜினிகாந்த்
ரஜினிகாந்த் நடிப்பில் கடைசியாக வெளிவந்து சூப்பர் ஹிட்டடித்த படம் ஜெயிலர். இப்படத்தை தொடர்ந்து ரஜினி நடிப்பில் வெளியான வேட்டையன் படம் சரியான வரவேற்பை பெறவில்லை.

தற்போது ரஜினி லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படத்தில் நடித்து வருகிறார். ரஜினியை தாண்டி இப்படத்தில் சத்யராஜ், அமீர்கான், உபேந்திரா, நாகர்ஜுனா, ஸ்ருதிஹாசன் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.

சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தினை அனிருத் இசையமைத்து வருகிறார். பாங்காங், ஜெய்ப்பூர், விசாகப்பட்டினம் என பல இடங்களில் ஷூட்டிங் நடைபெற்று வருகிறது.

சில தினங்களுக்கு முன்பு கூலி படப்பிடிப்பு 70 சதவிதம் முடிந்துவிட்டது, 13ம் தேதி முதல் 28ம் தேதி வரை படப்பிடிப்பு இருப்பதாக ரஜினி தெரிவித்திருந்தார்.

வெறித்தனமான அப்டேட்
இந்நிலையில், கூலி படம் சுதந்திர தினத்தை முன்னிட்டு வரும் ஆகஸ்ட் 14 – ம் தேதி வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே, ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ஜெயிலர் திரைப்படம் ஆகஸ்ட் மாதத்தில் வெளியாகி ஹிட் கொடுத்ததை தொடர்ந்து, கூலி படமும் அவ்வாறு வெற்றி பெரும் என எதிர்பாக்கப்படுகிறது.