நாட்டிலுள்ள குழந்தைகள் தொடர்பில் பெற்றோருக்கு சுகாதாரத்துறை அதிகாரிகளினால் முக்கிய அறிவுறுத்தல் ஒன்று விடுக்கப்பட்டுள்ளது.
சமீப காலமாக சுவாச நோய்களால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையிலேயே இந்த அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
இதன்போது, ஆஸ்துமா மற்றும் காசநோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சுவாச நோய் நிபுணர் வைத்தியர் நெரஞ்சன் திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், குழந்தைகளின் ஆரோக்கியம் தொடர்பில் பெற்றோர் விசேட கவனம் செலுத்தப்பட வேண்டுமென சுகாதார அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.