வீட்டில் பணத்தை தங்க விடாமல் செய்யும் விஷ ஜந்துக்கள் அவசியம் தெரிந்து கொள்ளுங்கள்

பொதுவாக சிலரின் வீட்டில் என்ன தான்வீட்டிலுள்ள அனைவரும் வேலை செய்தாலும் அவர்களின் வீட்டில் ஒரு நிம்மதி இருக்காது.

மாறாக அவர்கள் அடிக்கடி பண பிரச்சினைகளிலும் சிக்கிக் கொள்வதற்கான வாய்ப்பும் உள்ளது.

சிலருக்கு பணம் அதிகமாக இருக்கிறது என்ற எண்ணத்தில் அளவு அதிகமாக செலவு செய்வார்கள். இதனால் கூட பண தட்டுபாடுகள் ஏற்படுவதற்கு வாய்ப்பு உள்ளது.

அந்த வகையில், நாம் வீட்டில் தெரியாமல் செய்யும் சில காரியங்களினால் கூட பணம் வீண் விரயமாகும். எனவே எந்தெந்த விடயங்களை நாம் செய்யக்கூடாது என்பதனை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.

பணக்கஷ்டத்தை நிலையாக வைத்திருக்கும் தவறுகள்

1. சூரியன் மறைந்த பிறகு சுமாராக ஆறு மணிக்குப் பிறகு வீட்டைச் சுத்தம் செய்வது முற்றிலும் குறைத்து கொள்ள வேண்டும். இது வீட்டிற்கு துரதிர்ஷ்டத்தைக் கொண்டு வரும்.

2. வீட்டில் உள்ள தூசிகள், ஒட்டடைகள் போன்றவற்றை அடிக்கடி சுத்தம் செய்து விட வேண்டும். ஏனெனின் இது போன்ற அழுக்குகள் வீட்டில் எதிர்மறையான ஆற்றல்களை குடியேற்றும்.

3. வீட்டுக்குள் விஷத்தன்மையுள்ள உயிரினங்கள் வந்தால் அது செல்வத்தை குறைக்கும் என சாஸ்த்திரம் கூறுகிறது. அப்படி வருவதற்கான வாய்ப்பு இருந்தால் அதனை மூடி வைக்க வேண்டும்.

4. பூஜையறையையும் பூஜைப் பொருட்களையும் அழுக்கு படியாமல் பார்த்துக்கொள்ள கொய்வது அவசியம். எந்தளவு பூஜை அறை சுத்தமாக இருக்கிறதோ அந்த அளவு வீட்டில் தெய்வ சக்தி நிறைந்திருக்கும்.

5. தெய்வ சக்தி நிறைந்திருக்கும் வீடுகளில் எப்போதும் பணக்கஷ்டம் ஏற்படாது.

6. இரவு வேளையில் சாப்பிட்ட பின்னர் அந்த பாத்திரங்களை நன்றாக கழுவி வைத்த பின்னர் படுக்கைக்கு செல்ல வேண்டும். பாத்திரங்களை நீண்ட நேரத்துக்கு கழுவாமல் அப்படியே வைத்திருக்கக்கூடாது. இது பணக்கஷ்டத்தை ஏற்படுத்தும்.

7. அழுக்கு துணிகள் அதிகம் சேராமல் பார்த்துக் கொள்வது அவசியம்.

8. தலைமுடியை வீட்டுக்குள் சீவி அப்படியே போட்டுவிடக்கூடாது. அதிலும் குறிப்பாக பெண்களின் தலைமுடி கீழே சிந்தக் கூடாது.