பொதுவாக நம்மிள் பலருக்கு பருவ கால மாற்றங்களின் போது காது வலி ஏற்படும்.
காது வலிக்கும் பொழுது சிலர் அதில் எண்ணெய் விடுமாறு வலியுறுத்துவார்கள். ஆனால் இந்த வைத்தியம் செய்வதால் காதுக்கு பாதிப்பு ஏற்படும் என்பதனையும் பலரும் மறந்து விடுகிறார்கள். காது மற்றும் பல் வலி ஏற்பட்டால் இலகுவாக தாங்கிக் கொள்ள முடியாது.
இதன்படி, சிலருக்கு அடிக்கடி காது வலி ஏற்படும். வலியை தாங்கிக் கொள்ள முடியாதவர்கள் உடனே ஒரு சொட்டு தேங்காய் எண்ணெய் அல்லது வேறு ஏதேனும் எண்ணெயை சூடாக்கி வெதுவெதுப்பாக காதுக்குள் விடுவார்கள். இனி அந்த தவறை ஒரு போதும் செய்யக் கூடாது.
அப்படியாயின் காது வலிக்கும் பொழுது காதுகளுக்குள் எண்ணெய் விடலாம் என்பதனை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.
காது வலிக்கு எண்ணெய் விடலாமா?
காது வலி ஏற்படும் பொழுது எண்ணெய் ஊற்றினால் அது காதுக்குள் இருக்கும் சவ்வுகளை பாதிக்கும்.
மெல்லிய சவ்வுகள் பாதிப்படைந்து விட்டால் அது காது கேட்காத நிலைக்கு கொண்டு செல்லலாம். எனவே இனி காதில் எதுவும் பிரச்சினை இருந்தால் உடனே மருத்துவ சிகிச்சையை நாடுங்கள்.
ஏன் காது வலி ஏற்படுகிறது?
ஆயுர்வேதத்தின் படி, கப தோஷம் செயலிழப்பதன் விளைவாக காது வலி ஏற்படும். காதில் கப தோஷம் செயலிழக்கும் போது கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு அரிப்பு, தொடர்ச்சியான வீக்கம், லேசான வலி, அசாதாரண செவித்திறன், பாதிக்கப்பட்ட காதில் இருந்து வெள்ளை வெளியேற்றம் ஆகியவை ஏற்படக்கூடும்.
காது வலிக்கு வீட்டு வைத்தியங்கள்
1. காது வலிக்கும் போது நிறைய தண்ணீர் குடித்து உடலை அதிக நீர்ச்சத்துடன் வைத்திருக்க வேண்டும். இதனால் இயற்கையாகவே காது வலி குறையலாம்.
2. மருத்துவ ஆலோசனையுடன் நாசி துவாரங்களை சுத்தம் செய்ய வேண்டும்.
3. வலி அதிகமாக இருந்தால் சூடாகவோ அல்லது ஐஸ் கட்டிகளை வைத்தோ ஒத்தி எடுக்கலாம்.
காது வலிக்கும் பொழுது செய்யக்கூடாதவை
1. காது வலிக்கும் பொழுது சிலர் குச்சி, பட்ஸ் விட்டு சுத்தம் செய்வார்கள். இது செய்வது காதுகளுக்கு மேலும் பிரச்சினையை ஏற்படுத்தும்.
2. அதிக சத்தம் வைத்து பாடல்கள் அல்லது இசை கேட்பதை தவிர்த்து கொள்ளவும்.
3. காதில் இயர் போன் போட்டுக் கொண்டு செல்போனை பயன்படுத்துவதை தவிர்க்கவும். இது காது வலியை ஏற்படுத்தலாம்.
முக்கிய குறிப்பு
காது வலி தொடரும் போது கட்டாயம் மருத்துவ ஆலோசனைகளை பெற்று கொள்ள வேண்டும்.
சைனஸ், டான்சில், தாடை எலும்பில் பிரச்னை என்றாலும் காது வலிக்கும். எனவே உடனே அது தொடர்பான சிகிச்சை எடுத்துக் கொண்டால் காது வலி நிற்கும்.