உயிருக்கு போராடும் அன்பு அம்மா . மகேஷ்உதவிக்கு வருவாரா?

உயிருக்கு போராடும் அன்பு அம்மாவை காப்பாற்ற நினைக்கும் ஆனந்திக்கு உதவியாக மகேஷ் வருவாரா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கு அதிகரித்து வருகின்றது.

பிரபல தொலைக்காட்சியில் டிஆர்பி ரேட்டிங்கில் முதல் இடத்தில் இருக்கும் சீரியல் தான் சிங்க பெண்ணே.

இந்த சீரியல் மற்ற சீரியல்கள் போல் அல்லாமல் கதாநாயகிக்காக உண்மையான காதலூடன் காத்திருக்கும் இரண்டு நாயகர்களை கொண்டு நகர்த்தப்படுகின்றது.

ஆனந்தியை பணக்காரரான மகேஷும், ஏழை வீட்டு பையனான அன்புவும் காதலிக்கிறார்கள். எதுவும் அறியாத பாவப்பட்ட பெண்ணாக இருக்கும் ஆனந்தி இதனை எப்படி சமாளிக்கிறார் என்பதனையே கருவாக வைத்து இந்த கதைக்களம் சென்றுக் கொண்டிருக்கிறது.

இப்படி இருக்கும் பட்சத்தில் ஆனந்தியை கடத்துவதற்காக இரண்டு பேர் பாதையில் காத்திருக்கிறார்கள். அப்போது அந்த வழியில் வரும் அன்புவின் அம்மாவை கண்டதும் என்ன ஆனாலும் அவரிடம் சென்று பேசுவோம் என்ற தைரியத்துடன் அவர் நேரில் செல்கிறார்.
இந்த நிலையில், ஆனந்தி அன்பு அம்மாவுக்கு வந்த ஆபத்தை எப்படியாவது தடுத்து விட வேண்டும் என முயற்சி செய்தார். ஆனாலும் ஆனந்தி சொல்வதை கேட்காமல் அன்பு அம்மா செய்த தவறு அவரை தற்போது மருத்துவமனையில் படுக்க வைத்துள்ளது.

அவரை எப்படி காப்பாற்ற வேண்டும் என்றும் அன்புவின் குடும்பத்திற்கு உதவிச் செய்ய வேண்டும் என்றும் ஆனந்தி ஒரு பக்கம் போராடிக் கொண்டிருக்கிறார்.

அன்பு- ஆனந்தியின் நிலையை அறிந்து கொண்ட மகேஷ் மருத்துவமனைக்கு வந்து அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து வருகிறார். இவை அனைத்தும் அன்புக்காக இல்லை ஆனந்திகாக மட்டுமே என்பது சீரியல் ரசிகர்களுக்கு நன்றாக புரிகிறது. அத்துடன் ஆனந்தியை எப்படியாவது திருமணம் செய்து கொள்ள வேண்டும் என முடிவுடன் மகேஷ் ஓடிக் கொண்டிருக்கிறார்.

இப்படியாக இன்றைய நாளுக்கான சீரியல் ப்ரோமோ வெளியாகியுள்ளது.