கனடிய அரசியலில் மூக்கை நுழைக்கும் எலோன் மஸ்க்

கனடாவின் அரசியல் உள்விகாரங்களில் உலகின் செல்வந்தர்களில் ஒருவரான எலோன் மஸ்க் தலையீடு செய்வதாக தெரிவிக்கப்படுகிறது.

உலகின் செல்வந்தரும் எக்ஸ் தளம், டெஸ்லா வாகன நிறுவனத்தின் உரிமையாளருமான கனடிய அரசியல் விவகாரங்கள் தொடர்பில் அடிக்கடி கருத்துக்களை வெளியிட்டு வருகின்றார்.

மஸ்க் கான்சர்வேட்டிவ் கட்சியின் தலைவர் பியே பொலியேவை ஆதரித்து கருத்து வெளியிட்டுள்ளார்.

மேலும் அவர் தற்போதைய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவை கடுமையாக சாடியுள்ளார்.

கடந்த ஒரு வார கால பகுதியில் சமூக ஊடகங்களின் வாயிலாக கனடிய அரசியல் விவகாரங்கள் தொடர்பில் பல்வேறு கருத்து பதிவுகளை அவர் வெளியிட்டுள்ளார்.

கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவரை புகழ்ந்து அவர் பதிவுகளை இட்டுள்ளார் என்பதை குறிப்பிடத்தக்கது.

அதேவேளை கனடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் பதவி விலகலை அவர் கடுமையாக விமர்சனம் செய்திருந்தார்.

மஸ்கின் தாயாரான மே மஸ்க் கனடாவின் சஸ்கட்ச்வானில் பிறந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.