அஜித் ரசிகர்களுக்கு ஷாக்கிங் தகவல்

நடிகர் அஜித்தின் பட தகவல் இதுவரை வந்த நிலையில் கடந்த சில மாதங்களாகவே அவர் கார் ரேஸில் கலந்துகொள்ள எடுத்த பயிற்சி புகைப்படங்கள், வீடியோக்கள் தான் அதிகம் வெளியாகி வந்தன.

நேற்றில் இருந்து அவர் கார் ரேஸ் சென்ற வீடியோக்கள் நிறைய வெளியாகின. யூடியூப் பக்கத்திலும் இந்த கார் ரேஸ் பந்தயத்தை லைவ்வாக காட்டி வந்தனர்.

தற்போது 24 மணி நேர கார் ரேஸில் இருந்து அஜித் தற்போது விலகுவதாக தகவல் வந்துள்ளது.

அதாவது பயிற்சியின் போது ஏற்பட்ட விபத்தின் காரணமாக அஜித் துபாய் ரேஸில் இருந்து டிரைவராக விலகுகிறார். ஆனால் அவரது அணி பங்குபெறும் என தகவல்கள் வந்துள்ளது.