பொதவாக ஒவ்வொரு ஆண்டும் பண்டிகை வருவது வழக்கமாகும். ஆனால் ஒவ்வொரு பண்டிகைக்கும் ஒரே மாதிரியான உணவை சாப்பிடும் போது அது நம்மை சளித்துவிட வைக்கும்.
பொதுவாக தமிழர்களின் பண்டிகையாக இந்த தமிழர் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இது இந்த 2025 ம் ஆண்டு ஜனவரி 14-ஆம் தேதி செவ்வாய்க்கிழமை அன்று கொண்டாடப்படுகிறது.
இந்த பண்டிகைக்கு புத்தாஇந்நாளில் மக்கள் வீடுகளை மா தோரணையால் அலங்கரித்து, கோலமிட்டு பொங்கல், புத்தாடை உடுத்தி, கோயிலுக்கு சென்று வழிபட்டு, பொங்கல் வைத்து, கரும்பு தின்று உற்சாகமாகக் கொண்டாடி மகிழ்வார்கள்.
இந்த பண்டிகையின் பாரம்பரியதாக செய்யும் உணவு பொங்கல் தான். இந்த ஆண்டு பொங்கல் செய்யும் போது அதை எப்படி சுவையாக செய்ய வேண்டும் என்பதை இந்த பதவில் பார்க்கலாம்.
சர்க்கரைப் பொங்கல் செய்ய தேவையான பொருட்கள்
பச்சரிசி – 1/2 கப்
பாசி பருப்பு – 3 ஸ்பூன்
வெல்லம் – 3/4 கப்
நெய் – 4 ஸ்பூன்
உலர் திராட்சை – 15
முந்திரி – 10
ஏலக்காய் – 2
கிராம்பு – 2
தண்ணீர் – 4 கப்
சூடம் (விரும்பினால்) – 1 சிட்டிகை
செய்முறை
சர்க்கரைப் பொங்கல் செய்ய முதலில் அரிசியை தண்ணீரால் நன்கு கழுவி தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். பிறகு ஒரு குக்கரை அடுப்பில் வைத்து அதில் ஒரு ஸ்பூன் நெய் ஊற்றி சூடானதும் அதில் பாசிப்பருப்பு போட்டு பொன்னிறமாக வதக்கிக் கொள்ளுங்கள்.
அடுத்ததாக அதில் 3 கப் தண்ணீர் ஊற்றி கொள்ளுங்கள். அதனுடன் கழிவு வைத்துள்ள அரிசியையும் போட்டு குக்கரை மூடி 3 விசில் விட்டு இறக்கவும்.
இப்போது மற்றொரு அடுப்பில் ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் 1 கப் தண்ணீர் ஊற்றி அதனுடன் எடுத்து வைத்துள்ள வெல்லத்தை சேர்த்துக் கொள்ளுங்கள்.
வெல்லம் நன்றாக கரைந்ததும் அதை வடிகட்டி தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். குக்கரில் விசில் போன பிறகு அதை திறந்து அதில் வெல்லப்பாகுவை ஊற்றி மீண்டும் அடுப்பில் வைக்கவும்.
இப்போது அதனுடன் ஏலக்காய், கிராம்பு, வேண்டுமானால் சூடம் சேர்த்து சுமார் 5 நிமிடம் கிளறி விடுங்கள்.
மறுபுறம் அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் நெய் ஊற்றி சூடானதும் அதில் முந்திரி, உலர் திராட்சை போட்டு பொன்னிறமாக வறுத்து அதை குக்கரில் இருக்கும் பொங்கலுடன் சேர்த்து ஒரு முறை கிளறி விடுங்கள். அவ்வளவுதான் தித்திப்பான சர்க்கரை பொங்கல் தயார்.