தக்காளி பழத்தின் நன்மைகள்

தக்காளியை ஒரு பொருளாக, உணவின் சுவையை அதிகப்படுத்துவதற்காக சேர்க்கிறோம். ஆனால் அந்த தக்காளியில் நம் உடலுக்கு தேவையான சத்துக்கள் ஏராளமாக இருக்கின்றது.

வைட்டமின் ஏ, வைட்டமின் சி, கால்சியம், நார்ச்சத்து, பாஸ்பரஸ், இரும்புச்சத்து, வைட்டமின் பி, மாவுச்சத்து, ஃபோலேட், சாச்சுரேட்டட் கொழுப்பு, நியாசின் உயிர்ச்சத்து, வைட்டமின் பி6, மக்னீசியம், பாஸ்பரஸ், தாமிரம் போன்ற சத்துக்கள் இந்த தக்காளியில் அடங்கியுள்ளது. தக்காளியில் கலோரிகள் குறைந்த அளவில் இருக்கின்றது. இதில் மாவுச்சத்து குறைவாக உள்ளதால் சர்க்கரை நோயாளிகளும் சாப்பிடலாம்.

தக்காளியில் பீட்டா கரோட்டின் அளவு அதிகமாக உள்ளது. இது நம் சருமத்தை சூரிய வெப்பத்திலிருந்து பாதுகாக்கும். நம் சருமமானது சுருக்கத்தில் இருந்து நீங்கவும், எண்ணெய் வழியாமல் இருக்கவும் தக்காளி பழத்தினை விழுதாக அரைத்து முகத்தில் போட்டு அரை மணிநேரம் கழித்து முகத்தைக் கழுவினால் முகம் பளபளப்பு தன்மையை பெறும்.

வைட்டமின் கே மற்றும் கால்சியம் சத்தானது தக்காளி பழத்தில் அதிக அளவில் உள்ளது. இதை தினந்தோறும் நாம் சாப்பிட்டு வருவதன் மூலம் நம் எலும்புகள் உறுதியாக்கப்படுகின்றன. மூட்டு வலி, எலும்பு தேய்மானம் போன்ற பிரச்சனைகளை இதன் மூலம் நாம் தவிர்க்கலாம்.

உங்களின் சருமம் மென்மையாக இருக்க வேண்டுமென்றால் தக்காளி விழுதுடன் சிறிதளவு தயிர் சேர்த்து, முகத்தில் தடவி ஃபேஸ் மாஸ்க் போட்டு அரை மணி நேரம் கழித்து முகத்தை குளிர்ந்த தண்ணீரில் கழுவி வந்தால் சருமம் மென்மையாக மாறும்.