வில்வம் மருத்துவ பயன்கள்

நம்மில் பலருக்கு வில்வ இலையை பற்றி தெரிந்திருக்காது. இதற்க்கு காரணம் நாம் இதனை அதிகமாக பயன்படுத்துவதில்லை. இது சிவனுக்கு படைக்க கூடிய வழிபட்டு இடங்களில் மட்டுமே நாம் பார்த்திருப்போம்.

நம்முடைய இயற்கையில் நமக்கு தேவையான அனைத்து மருந்துகளும் உள்ளது. ஆனால் நமக்கு தெரியாமல் இருப்பதால் தான் அதனுடைய பலன்களை நம்மால் பெற முடியாமல் போகிறது.

கோடை காலம் நமக்கு சரும பிரச்சனைகளோடு கண் பிரச்சனைகளும் வரும் இதற்கு வில்வ இலையை வதக்கி சூட்டுடன் நம் கண்களுக்கு ஒத்தனம் கொடுத்து வந்தால் இந்த பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம்.

நமக்கு வயிற்று வலி ஏற்படுவதற்கு நாம் உண்ணும் உணவால் தான் இருக்கும். இதற்கு வில்வ தளிரை வதக்கி நாம் சூடாக்கி குடித்து வந்தால் நம் வயிற்றில் உள்ள நுண்ணயிர்கள் கொல்லப்படும். இதனால் நம் வயிற்று வலி நீங்கும்.

இன்றைய காலகட்டத்தில் பலருக்கு இருக்கும் பிரச்சனை முடி உதிர்தல். இதற்கு வில்வ காயை எடுத்து அரைத்து அதனுடன் பால் கலந்து நம்முடைய தலைக்கு தேய்த்து கொள்ள வேண்டும். சிறிது நேரம் கழித்து குளிக்க வேண்டும். இவ்வாறு செய்தால் நமக்கு கண் எரிச்சல். மற்றும் முடி உதிர்தல் நீங்கும்.

முகத்தில் உள்ள கரும்புள்ளியை நீக்க வில்வ காயை எடுத்து அதன் சதை பகுதியை மட்டும் எடுத்து கொள்ள வேண்டும். அதில் பால் கலந்து அந்த கலவையை முகத்தில் தடவி வந்தால் நம் முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் நீங்கும்.