பிக்பாஸ்- எவிக்ஷனில் அதிரடி மாற்றம் கண்ணீருடன் வெளியேறிய போட்டியாளர்!

இந்த வாரம், பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்ட போட்டியாளர் யார் என்பது பற்றிய தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

பிக்பாஸ்
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி இன்னும் இரண்டு வாரங்களில் நிறைவுக்கு வரவிருக்கிறது.

தற்போது பிக்பாஸ் வீட்டில் 10 போட்டியாளர்கள் விளையாடி வருகிறார்கள். கடந்த இரண்டு வாரங்களாக டபுள் எவிக்ஷன் வைத்து பிக்பாஸ் போட்டியாளர்கள் வெளியேறி வருகிறார்கள்.

அந்த வரிசையில் இந்த வாரம் அருண் மற்றும் பவித்திரா குறைவான வாக்குக்கள் பெற்று கடைசியாக இருக்கிறார்கள்

கடந்த சில வாரங்களாக அருணின் ஆட்டம் மோசமாக இருந்ததன் விளைவாக இந்த வாரம் வெளியேறப்போகிறார் என்ற செய்தி வைரலாக இருந்தது.

இந்த வாரம் வெளியேறியது யார்?

இந்த நிலையில், பிக்பாஸ் வீட்டில் இருந்த “பாரதி கண்ணம்மா” சீரியல் மூலம் பிரபலமான அருண் பிரசாத் தான் வெளியேறியுள்ளார்.

டைட்டில் வின்னர் நான் தான் என்பது போல், காலரை தூக்கி விட்டு கொண்டு சுற்றிக் கொண்டிருந்த இவருக்கு ஆதரவாக இவரின் காதலி அர்ச்சனா ரவிச்சந்திரன் தொடர்ந்து ஏராளமான வீடியோக்களை வெளியிட்டு வந்தார்.

ஆனால் எதுவும் இவர்களின் பிளான் பழிக்காமல் போய் விட்டது. இந்த செய்தி அர்ச்சனா ரசிகர்களுக்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதுடன், கவலை வெளியிட்டு வருகிறார்கள். அத்துடன், இன்றைய தினம் அடுத்த போட்டியாளராக பவித்திரா வெளியேற போவதாக தகவல் வெளியாகி வருகின்றது.