பிரபல நடிகை கமலா காமேஷ் காலமானார்

பிரபல நடிகை கமலா காமேஷ் காலமானதாக சமூக வலைத்தளங்களில் தகவல் வெளியாகியுள்ளது.

நடிகை கமலா காமேஷ்

தமிழ் சினிமாவில் நடிகையாக திகழ்ந்தவரும், சின்னத்திரையில் பிரபலமான உமா ரியாஸின் அம்மாவுமான கமலா காமேஷ் காலமானார்.

தமிழ் ரசிகர்கள் அவருக்கு தொடர்ச்சியாக அஞ்சலி செலுத்தி வருகின்றனர். தமிழில் ஜெயபாரதி இயக்கிய குடிசை திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர்.

தொடர்ச்சியாக 480க்கும் அதிகமான திரைப்படங்களில் நடித்திருக்கிறார். கடலோர கவிதைகள், அலைகள் ஓய்வதில்லை படங்களில் நடித்திருந்தாலும் சம்சாரம் அது மின்சாரம் படத்தின் கோதாவரி கதாபாத்திரத்தில் ரசிகர்களை பெரிதும் கவர்ந்திருந்தார்.

ஆர்.ஜே.பாலாஜியின் வீட்ல விசேஷங்க படத்தில் கடைசியாக நடித்திருந்தார்.

தமிழ் சினிமாவை தாண்டி சின்னத்திரையில் நடித்து வந்தார். கடந்த 1974ம் ஆண்டு இசையமைப்பாளர் காமேஷை திருமணம் செய்துக்கொண்டார்.

காலாமானார்
இந்த நிலையில் கடந்த 1984ம் ஆண்டு காமேஷ் தவறிவிட, மகள் உமா ரியாஸை தனியாளாக வளர்த்து இருக்கிறார்.

ஷூட்டிங் சமயத்தில் கமலா காமேஷுக்கு இடுப்பில் அடிப்பட்டதால், 1996ம் ஆண்டு ஆபிரேஷன் செய்துக்கொள்ளும் நிலை ஏற்பட்டதாம். அதற்கு பிறகும் வலி குறையாமல் இருக்க தொடர்ச்சியாக ஏழு முறை இடுப்பில் ஆபிரேஷன் செய்து இருக்கிறார்.

உமா ரியாஸ் தன்னை அம்மாவாக பார்த்துக்கொள்வதாக தெரிவித்து இருந்தார்.

இப்படியொரு சமயத்தில் தற்போது 72 வயதாகும் கமலா காமேஷ் இன்று காலமாகி இருக்கிறார். இவருக்கு தமிழ் சினிமா ரசிகர்கள் மற்றும் சின்னத்திரை ரசிகர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.