தினமும் காலையில் வெறும் வயிற்றில் ஒரு ஸ்பூன் நெய்யை வெந்நீரில் கலந்து குடிப்பதால் நெய்யிலுள்ள அத்தியாவசிய ஃபாட்டி ஆசிட்கள் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளன, இது உங்களுக்கு எல்லா வகையிலும் நன்மை அளிக்கிறது.
நெய்யை வெந்நீரில் கலந்து குடிப்பதால் உடலில் எவ்வாறான நன்மையை அளிக்கும் என நாம் இங்கு பார்ப்போம்.
சருமத்திற்கு பளபளப்பை அளிக்கிறது
இந்த நெய் ஆனது சருமத்தில் கொலாஜன் உற்பத்தியை அதிகரிக்கிறது, இது சருமத்தின் பொலிவை மேம்படுத்துகிறது. மேலும் இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து உடலுக்கு விரைவான ஆற்றலை அளிக்கிறது. நெய் ஆரோக்கியத்திற்கு நன்மை அளிக்கும் என்றாலும், அதை சிறிய அளவில் சாப்பிட வேண்டும். இல்லையெனில், அது தீங்கு விளைவிக்கும்.
குடலின் ஒவ்வொரு செல்லுக்கும் நன்மை அளிக்கிறது
ஆயுர்வேதத்தில் வெதுவெதுப்பான நீரில் நெய் கலந்து சாப்பிடுவது மிகவும் பிரபலமானது, ஆனால் நெய்யை வெந்நீரில் கலந்து குடிப்பதால் எடை குறையும் என்று உறுதியாகச் சொல்ல முடியாது. நெய் ஆனது செரிமானத்தை அதிகரிக்கிறது மற்றும் குடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை அளிக்கிறது என்று பாரம்பரியமாக நம்பப்படுகிறது