காலை உணவை ஆரோக்கியமாகவும்,சுவையாகவும் சாப்பிட ஒரு சட்னி

காலையில் வீட்டில் பல வகையான உணவுகள் செய்வது வழக்கம். இதில் இட்லி தோசை முக்கியமாக இடம்பெறும். இதற்கு தொட்டுக்கொள்ள எப்படியும் வீட்டில் சட்னி செய்வது வழக்கம்.

இது ஆரோக்கியமாக இருப்பத மிகவும் முக்கியம். அந்த வகையில் தற்போது நெல்லிக்காயில் கார சட்னி எப்படி செய்யலாம் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

நெல்லிக்காயில் பல சத்துக்கள் காணப்படுகன்றது. இதில் இருக்கும் வைட்டமின் சி உடலின் அனைத்து பாகங்களின் திறனுக்கும் உதவுகிறது.

தேவையான பொருட்கள்
நெல்லிக்காய் – 3
பெரிய வெங்காயம் – 2
தக்காளி – 2
மல்லித்தழை – ஒரு
கைப்பிடியளவு புளி – ஒரு சிறிய துண்டு
எண்ணெய் – ஒரு ஸ்பூன்
உளுந்து – ஒரு ஸ்பூன்
கடலை பருப்பு – ஒரு ஸ்பூன்
பூண்டு – 2 பல்
இஞ்சி – சிறிய துண்டு
வர மிளகாய் – 2
உப்பு – தேவையான அளவு
தாளிக்க தேவையான பொருட்கள்
எண்ணெய் – ஒரு ஸ்பூன்
கடுகு – ஒரு ஸ்பூன்
உளுந்து – ஒரு ஸ்பூன்
வர மிளகாய் – 2
கறிவேப்பிலை – 1 கொத்து
செய்முறை
ஒரு பாத்திரத்தில் எண்ணெய் சேர்த்து உளுந்து, கடலை பருப்பு சேர்த்து அவை பொன்னிறமாகும் வரை வறுக்கவேணடும். அடுத்து இஞ்சி, பூண்டு, வெங்காயம், தக்காளி, நெல்லிக்காய், புளி, மல்லித்தழை, வர மிளகாய், உப்பு சேர்த்து நன்றாக வதக்கவேண்டும்.

இவற்றை நன்றாக வதக்கிவிட்டு, ஆறவிடவேண்டும். ஆறிய பின்னர் அதை மிக்ஸி ஜாரில் சேர்த்து அரைத்துக்கொள்ளவேண்டும்.

ஒரு தாளிப்பு கரண்டியில் எண்ணெய் ஊற்றி சூடானவுடன், அதில் கடுகு, உளுந்து சேர்த்து பொரிந்தவுடன், கறிவேப்பிலை, வர மிளகாய் சேர்த்து தாளித்துக்கொள்ளவேண்டும்.

இதை சட்னியில் சேர்த்தால் சுவையான நெல்லிக்காய் சட்னி தயார். இதை இட்லி, தோசை, சப்பாத்தி, பூரி என எதனுடன் வேண்டுமானாலும் தொட்டுக்கொண்டு சாப்பிட சுவை அள்ளும்.