சரிகமபவில் தற்போது பொங்கல் திருநாளை முன்னிட்டு பாடல் பாடி போட்டியாளர்கள் கொண்டாடுகின்றனர். இதனுடைய வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
சரிகமப
இந்த நிகழ்ச்சியில் பங்கு பற்றிய அனைத்து போட்டியாளர்களும் திறமை வாய்ந்தவர்கள். பல துறை சரிகமப நிகழ்ச்சியை நாம் பார்த்ததுண்டு ஆனால் தற்போது இந்நிகழ்ச்சியில் போட்டியாளர்களை தெரிவு செய்த குழு மிகவும் திறமை வாய்ந்தது.
ஒருவருக்கு ஒருவர் சலிக்காதவர்களாக இருக்கிறார்கள். போட்டியை விட்டு விலகிச்செல்பவர்கள் யாராக இருந்தாலும் மக்களுக்கு மன வருத்தத்தை கொடுக்கிறது.
இந்த நிலையில் கடந்த வாரம் பாடகர் தேவாவின் சுற்று நடந்து நடைபெற்று முடிந்தது. இதில் போட்டியாளர்கள் சிறப்பாக பாடி பாராட்டுக்களை பெற்றனர்.
இந்த நிலையில் இந்த வாரம் பொங்கல் திருநாள் வருகின்ற காரணத்தினால் அதை முன்னிட்டு நிகழ்ச்சியின் துன்னாள் போட்டியாளர்களுடன் தற்போது இருக்கும் போட்டியாளர்களும் சிறப்பாக பாடி வருகின்றனர்.