பொதுவாகவே ஞாயிற்று கிழமைகளில் பெரும்பாலானவர்களுக்கு விடுமுறை என்பதால், வித்தியாசமான உணவுகளை தயாரித்து ஒரு நாளாவது ஆறுதலாக சாப்பிட வேண்டும் என நினைப்பார்கள்.
அசைவ பிரியர்களில் சிக்கன் பிடிக்காதவர்கள் யாரும் இருக்கவே முடியாது. அந்தளவுக்கு சிக்கன் எல்லா உணவு வகைகளுடனும் அசத்தலாக சுவையை கொடுக்கக்கூடியது.
அந்த வகையில் ஹோட்டால் பாணியில் சிக்கன் மிளகாய் பிரட்லை மிகவும் விரைவாகவும் அருமையான சுவையிலும் வீட்டிலேயே எப்படி செய்யலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
நல்லெண்ணெய் – 2 மேசைக்கரண்டி
சிக்கன் – 1/2 கிலோ
கறிவேப்பிலை – 1 கொத்து
உப்பு – சுவைக்கேற்ப
மஞ்சள் தூள் – 1/4 தே.கரண்டி
சின்ன வெங்காயம் – 25
வரமிளகாய் – 10
கொத்தமல்லி – சிறிதளவு
செய்முறை
முதலில் சிக்கனை நன்றாக சுத்தம் செய்து ஒரு மிக்சர் ஜாரில் சின்ன வெங்காயம் மற்றும் வரமிளகாய் ஆகியவற்றை சேர்த்து சற்று கொரகொரப்பான பதத்தில் அரைத்துக்கொள்ள வேண்டும்.
அதனையடுத்து ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும், கழுவி வைத்துள்ள சிக்கனை அதில் போட்டு கறிவேப்பிலை தூவி, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்றாக கிளறிவிட்டு வதக்கிக்கொள்ள வேண்டும்.
பின்னர் அதனுடன் அரைத்து வைத்துள்ள வெங்காயம் மற்றும் வரமிளகாய் விழுதை சேர்த்து நன்றாக கிளறிவிட்டு, நீர் சேர்க்காமல், மிதமான தீயில் மூடி வைத்து, சிக்கனை 15 நிமிடங்கள் வரையில் வேகவிட வேண்டும்.
இறுதியில் மூடியைத் திறந்து, சிக்கனை கிளறிவிட்டு கொத்தமல்லி அலைகளை தூவி இறக்கினால், சுவையான சிக்கன் மிளகாய் பிரட்டல் தயார்.