கொழும்பில் போதைப் பொருளுடன் நபர் ஒருவர் கைது!

கடுவெல, கொரத்தோட்ட வெலிஹிந்த பிரதேசத்தில் போதைப்பொருளுடன் நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடம் இருந்த சுமார் 4.5 கிலோகிராம் ஐஸ் போதைப்பொருளும், 500 கிராம் ஹெரோயின் போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டதாக நவகமுவ பொலிஸார் தெரிவித்தனர்.

கைப்பற்றப்பட்ட போதைப்பொருளின் மதிப்பு சுமார் ரூ. 40 மில்லியன் இருக்குமென பொலிஸார் தெரிவித்துள்ளனர்.