ஈஸ்வரியை மிரட்டிய ராதிகா வெளியாகிய ப்ரமோ

பாக்கியலட்சுமி சீரியலில் ஈஸ்வரி ராதிகாவை சத்தம் போட்டு கேள்வி எழுப்பிய நிலையில், பதிலுக்கு ராதிகா ஈஸ்வரியை தனது பாணியில் மிரட்டியுள்ளார்.

பாக்கியலட்சுமி
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி சீரியல் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக உள்ளது.

நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த பெண் கணவர் வீட்டில் சந்திக்கும் பிரச்சனைகள் மற்றும் அவர் துணையில்லாமல் வாழ்ந்து காட்டும் கதையை கொண்டு செல்கின்றது.

கணவரைப் பிரிந்து தனி ஆளாக பிள்ளைகள் மற்றும் மாமியாரைக் கவனித்து வருகின்றார் பாக்கியா. தற்போது கோபி மற்றும் ராதிகா இருவரும் பாக்கியா வீட்டில் தான் தங்கியுள்ளனர்.

பாக்கியா கோபியை கொஞ்சம் கொஞ்சமாக மன்னித்து வருகின்றார். தற்போது பாக்கியாவின் ஹோட்டலுக்கு கோபியும் தனது ஆட்களை அனுப்பி உதவி செய்வதாக கூறியுள்ளார்.

இந்நிலையில் பாக்கியாவை ஈஸ்வரி எப்பொழுதும் சத்தம் போட்டுக் கொண்டிருப்பதை பார்த்த ராதிகா, பாக்கியாவிடம் நீங்கள் சத்தம் போட வேண்டியது தானே என்று கூறியுள்ளார்.

அதற்கு பாக்கியா தனது பதிலை கொடுத்துள்ள நிலையில், ஈஸ்வரி இதை மறைந்திருந்து கேட்டுக் கொண்டிருக்கின்றார். பின்பு ஈஸ்வரி ராதிகாவிடம் சத்தம் போட்ட நிலையில், எங்கிட்ட இப்படி சத்தமா பேசாதீங்க… என்று அதட்டியுள்ளார்.