பொதுவாக பெண்கள் அதிகம் சந்திக்கும் பிரச்சினைகளில் பேன் தொல்லையும் ஒன்று.
முடி வளர்ச்சி அதிகமாக உள்ளவர்களும், தலைமுடிகளில் அழுக்கு இருந்தாலும் கட்டாயம் பேன் பரவும்.
அப்படி பேன் தொல்லையால் அவதிபடுபவர்கள் இரு வழிகளில் பேன் தொல்லைகளில் இருந்து விடுபடலாம்.
கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு பேன் தொல்லை அதிகமாக இருந்தால் மருத்துவரை அணுக வேண்டும். மற்றொன்று நாமாகவே இயற்கை முறையில் வீட்டில் மருத்துவம் செய்யலாம்.
அந்த வகையில் பேன்கள் வராமல் தடுக்கலாம் என்பதனை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.
வேப்பிலை+ துளசி
துளசி மற்றும் வேப்பிலையை நன்றாக அரைத்து, அதை வேர்களில் படும் படி தேய்த்து 30 நிமிடங்கள் ஊர விடவும்.
பிறகு வழமையாக பயன்படுத்தும் சேம்போவை தலைக்கு வைத்து குளித்துவிடுங்கள்.
இப்படி வாரம் இரண்டு முறை செய்தால் பேன் தொல்லை இருக்காது.
பூண்டு
பூண்டை நன்கு அரைத்து அதில் கொஞ்சம் எலுமிச்சை சாறு கலந்து தலைக்கு பூசுங்கள்.
30 நிமிடங்கள் கழித்து குளித்தால் பேன்கள் அகலும்.
வாரம் ஒரு முறை செய்யலாம்.
முக்கிய குறிப்பு
ஒவ்வாமை இருந்தால் மருத்துவரை பார்ப்பது சிறந்தது.