இஸ்ரேல்- காசா இடையிலான போர் நிறுத்தம்!

அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள டொனால்டு டிரம்ப் வருகிற திங்கட்கிழமை அதிபராக பதவி ஏற்க உள்ள நிலையில் பேச்சுவார்த்தை வெற்றியடைந்து இஸ்ரேல்- காசா இடையில் போர் நிறுத்தம் ஏற்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

அத்துடன் ஹமாஸ் 33 பிணைக்கைதிகளை விடுதலை செய்ய தயாராக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 7-திகதி பிணைக்கைதியாக பிடிக்கப்பட்டவர்களில் இன்னும் 94 பேர் ஹமாஸ் வசம் உள்ளனர்.

இதில் சுமார் 34 பேர் உயிரிழந்திருக்கலாம் என இஸ்ரேலால் நம்பப்படுகிறது.