முடிகொட்டும் பிரச்சினைக்கு தீர்வாகும் சின்ன வெங்காயம்!

முடி கொட்டுதல் மற்றும் வளர்ச்சிக்கு சின்ன வெங்காயம் பெரிதும் உதவுகின்றது.

இன்று பெரும்பாலான பெண்களின் பிரச்சினை என்னவெனில் முடி கொட்டுதல், முடி வளர்வதில் சிக்கல் ஏற்படுதலாகும்.

அதிலும் சிலர் பொடுகு தொல்லையாலும் அவதிப்படும் நிலையில், இதற்காக பல ஷாம்பு மற்றும் கண்டிஷ்னர் சந்தையில் விற்கப்படுகின்றன. இவை அவ்வளவாக தீர்வு கொடுப்பதில்லை.

அந்த வகையில், சின்ன வெங்காயம் முடி பிரச்சனைக்கு எவ்வாறு தீர்வு அளிக்கின்றது என்பதை தெரிந்து கொள்வோம்.

சின்ன வெங்காயத்தை தலைமுடி வளர்ச்சியை அதிகப்படுத்துமா?

1. பழங்காலத்தில் இருந்து சின்ன வெங்காயம் முடி உதிர்வுக்கு தீர்வாக இருந்து வருகின்றது. இது தலைக்குள் சென்று வேர் பகுதியை வலுப்படுத்தி முடி உதிர்வை தடுக்கிறது.

2. சின்ன வெங்காயத்தில் இருக்கும் சல்பர் என்ற வேதிப்பொருள் முடி வளர்ச்சிக்கு உதவுகிறது அத்துடன் கொலாஜன் உற்பத்தியையும் அதிகரிக்கின்றது.

3. சின்ன வெங்காயத்தில் இயற்கையாகவே பாக்டீரியா மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் நிறைந்துள்ளதால் பொடுகு தொல்லையில் இருந்து பாதுகாப்பு கொடுக்கிறது.

4. நரைமுடி பிரச்சனைக்கும் தீர்வு காண நினைப்பவர்கள் வெங்காயம் சாற்றை மருந்தாக பயன்படுத்தலாம். இதிலிருக்கும் ஆன்டி ஆக்ஸிடன்ட் பண்புகள் ரத்த ஓட்டத்தை மேம்படுத்தி இளநரை பிரச்சனையை குறைக்கிறது.

5. வெங்காய சாறை தேங்காய் எண்ணெய்யில் கலந்து நன்றாக கொதிக்க வைத்து அதன் பின்னர் அதனை தலைக்கு தடவி மசாஜ் செய்தால் தலை முடி நன்றாக வளரும்.

6. வெங்காய சாறை முடியின் வேர்க்கால்களில் படும்படியாக நன்றாக தேய்த்து மசாஜ் செய்தால் முடி உதிர்வு தடுக்கப்படுவதுடன், முடி அடர்த்தியாகவும் வளரவும் ஆரம்பிக்கும்.