கால்வாயில் மீட்க்கப்பட பெண்ணின் சடலம்!

இரத்மலானை, லுணாவ கால்வாய் திட்டத்திற்கு சொந்தமான விகாரை ஒன்றிற்கு அருகில் உள்ள கால்வாயிலிருந்து பெண் ஒருவரின் சடலம் இன்று (17) மீட்கப்பட்டுள்ளதாக கல்கிசை பொலிஸார் தெரிவித்தனர்.

பிரதேசவாசிகள் சிலர் கால்வாயில் சடலம் இருப்பதை கண்டு, கல்கிசை பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.

இதனையடுத்து, சடலமானது பிரேத பரிசோதனைக்காக கொழும்பு தெற்கு போதனா வைத்தியசாலையின் பிரேத அறைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

சடலமாக மீட்கப்பட்டவர் தொடர்பில் இதுவரை எந்தவித தகவல்களும் கிடைக்கவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.

இந்நிலையில் தொடர்பான மேலதிக விசாரணைகளை கல்கிசை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் மேற்பார்வையின் கீழ் கல்கிசை பொலிஸ் குற்றத் தடுப்பு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.