நடை பயிற்சியின் போது இந்த தவறை மாடும் செய்யாதீங்க

தினமும் நடைபயிற்சி செய்து வந்தால் உடலுக்கு ஏகப்பட்ட நன்மைகள் கிடைக்கும்.

மகிழ்ச்சியாக உணர்வது முதல் உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்வது வரையிலான நிறைய பலன்களை அனுபவிக்க முடியும்.

இருந்தாலும் நடைப்பயிற்சி மேற்கொண்ட பிறகும் நாம் எதிர்பார்த்த முடிவுகளை பெறாதபோது நமக்கு சற்று வருத்தமாக தான் இருக்கும். சிலர் நடைபயிற்சியை முறையாக செய்யாமல் இருப்பார்கள்.

இப்படியான நேரங்களில் நடைபயிற்சியின் பலன்கள் சற்று குறைவாகவே இருக்கும்.

அந்த வகையில் நடைபயிற்சியின் போது நாம் விடும் தவறுகள் பற்றி தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.

நடைபயிற்சி செய்தாலும் எடை குறையாமல் இருப்பதற்கான காரணங்கள்
1. நடைபயிற்சியின் போது மெதுவாக நடப்பது நம்முடைய மன ஆரோக்கியத்திற்கு பல நன்மைகளை தந்தாலும் நம்முடைய மூட்டுகளுக்கு அதிக அழுத்தம் ஏற்படாது. இதனால் உங்களின் எடையில் மாற்றம் ஏற்படாது. மாறாக உடல் எடையை வேகமாக குறைக்க நினைப்பவர்கள் நடைபயிற்சியை வேகப்படுத்த வேண்டும்.

2. போதுமான அளவு நடைப்பயிற்சிக்கு செல்லாவிட்டாலும் நீங்கள் எதிர்பார்த்த முடிவுகளை பெற இயலாது. ஒரே நேரத்தில் நெடுதூரம் நடப்பதற்கு உங்களிடம் போதுமான நேரம் இல்லாவிட்டால் அதனை 4 பகுதியாக பிரித்து கொள்ளலாம்.ஏனெனின் பெண்கள் குடும்ப சூழ்நிலை காரணமாக தொடர்ந்து நடைபயிற்சி செய்ய முடியாத நிலை இருக்கும்.

3. சிலருக்கு நடைப்பயிற்சிக்கு சென்று, தினமும் உடற்பயிற்சியை மேற்கொண்டு, ஆரோக்கியமான உணவை சாப்பிட்ட பிறகும் உடல் எடை குறையாமல் இருக்கும். உதாரணமாக, தைராய்டு கோளாறுகள், ஹார்மோன் சமநிலையின்மை அல்லது இன்சுலின் உணர்திறன் போன்ற நோய்கள் இருப்பவர்கள் உடல் எடை சீக்கிரமாக குறையாது.