பொதுவாக ஒவ்வொரு ராசியில் பிறந்தவர்களும் ஒரு குறிப்பிட்ட விடயத்தில் ஆளுமை கொண்டவர்களாக காணப்படுவார்கள்.
அதே போன்று ஒவ்வொரு கிழமைகளில் பிறந்தவர்களும் அதன் நேரம் மற்றும் கிரக மாற்றத்திற்கமைய ஒவ்வொரு திறமைகளை கொண்டிருப்பார்கள். அவர்களின் ஆளுமைகளும் வித்தியாசமாக இருக்கும்.
வாரத்தின் இரண்டாவது நாளான திங்கட்கிழமை பிறந்தவர்கள் இயற்கையிலேயே தலைமைத்துவ குணங்களைக் கொண்டவர்களாக இருப்பார்கள்.
இந்த நாளில் பிறந்தவர்கள் மீது கிரகங்களின் ராஜாவான சந்திரன் பகவானால் ஆளப்படுவார்கள்.
அந்த வகையில் திங்கட்கிழமை பிறந்தவர்கள் எப்படிப்பட்டவர்கள், அவர்களின் பலம் மற்றும் பலவீனம் என்பதனை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.
திங்கட்கிழமை பிறந்தவர்கள்
1. திங்கட்கிழமை பிறந்தவர்கள் மற்றவர்கள் போல் அல்லாமல் அனைவரும் மீதும் அதிகமாக அக்கறை காட்டுவார்கள். இவர்களின் உணர்வுகளை புரிந்து கொள்ள முடியாது. தன்னை நல்லவர்களாக காட்டிக் கொள்வார்கள். இவர்களிடம் நம்பிக்கை மற்றும் விருப்பம் அதிகமாக இருக்கும். திங்கட்கிழமை பிறந்தவர்களுடன் குடும்பம் நடத்துவது கடினமாக இருக்கும்.
2. எவ்வளவு கடினமான சூழ்நிலைகளையும் பழகிக் கொண்டு அதன்படி நடந்து கொள்வார்கள். மற்றவர்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு நடந்துக் கொள்வார்கள். எப்போதும் சந்திரனைப் போல தோற்றமளிக்கும் வசீகரமான தோற்றத்தைக் கொண்டிருப்பார்கள். அத்துடன் புத்திசாலிகளாகவும் இருப்பார்கள்.
3. திங்கட்கிழமைகளில் பிறந்தவர்கள் உள்முக சிந்தனை கொண்டவர்களாக இருக்கும் இவர்கள் எந்தவொரு செயலையும் செய்வதற்கு முன்பு மற்றவர்களின் உந்துதலுக்காக காத்திருப்பார்கள். எவ்வளவு வாய்ப்புகள் இருந்தாலும் அதனை பயன்படுத்தாமல் மற்றவர்களை பற்றி குறை பேசும் நபராக இருப்பார்கள். வசதியான குடும்பத்தில் பிறப்பார்கள். குடும்பத்தினர் மீது அளவுக்கடந்த அன்பு கொண்டவர்களாக இருப்பார்கள்.
4. திங்கட்கிழமை பிறந்தவர்கள் மென்மையானவர்களாக இருப்பதால் இவர்களிடம் உற்சாகம் இருக்காமு. இதனால் சண்டைகள், குற்றச்சாட்டுகள் மற்றும் வாக்குவாதங்கள் ஏற்படுவது குறைவாக இருக்கும். கல்வித்துறையில் சிறந்து விளங்குவார்கள். ஆனால் வியாபாரம் செய்வது இவர்களுக்கு சரி வராது.
5. இவர்கள் சந்திரனின் அமைதி இருப்பதால் நிறைய விடயங்களை வெளிப்படுத்தமாட்டார்கள். மற்றவர்களிடம் அன்பாகவும், அக்கறையுடனும் நடந்து கொள்வார்கள். வாழ்க்கை துணையை மிகவும் நேசிப்பார்கள். எந்தளவு உண்மையாக இருக்க வேண்டுமோ அவ்வளவு உண்மையாக இருப்பார்கள்.