காலநிலை தொடர்பில் கனேடிய மக்களுக்கு எச்சரிக்கை!

கனடாவின்(Canada) ரொறன்ரோவில்(Toronto) இந்த வார இறுதியில் கடுமையான குளிருடனான காலநிலை நிலவும் என எதிர்வு கூறப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கனடா மற்றும் அமெரிக்காவின் சில பகுதிகளில் ஆர்க்டிக் காற்று வீசுவதால் கடுமையான குளிர் நிலவும் என தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த தகவல்களை கனேடிய சுற்றாடல் திணைக்களம் வெளியிட்டுள்ளது.

அதன்படி, இன்று(18) பிற்பகலில், வெப்பநிலை அதிகபட்சம் மறை 4பாகை செல்சியஸாக குறையும் என்றும் இது மறை 10பாகை செல்சியஸ் அளவில் உணரப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், ஈரப்பதனின் அளவு அதகிரிப்பதனால் நாளை(19) மறை 20பாகை செல்சியஸ் வெப்பநிலையை உணர முடியும் என தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில், ஆர்க்டிக் காற்றின் ஊடுருவல் அடுத்த வியாழக்கிழமை(23) வரை நீக்கும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.