அநுர (Anura Kumara Dissanayake) அரசாங்கத்திலும் தொடர்ந்து காணி அபகரிப்புக்கள் நடைபெற்ற வண்ணமே உள்ளது என மட்டக்களப்பு (Batticaloa) மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் (Shanakiyan Rasamanickam) தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் பட்டிப்பளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கெவிளியாமடுவில் மேய்ச்சல் தரைக்காணிகளில் முன்னெடுக்கப்படும் அத்துமீறிய பயிர்ச்செய்கை மற்றும் குடியேற்றங்கள் தொடர்பில் ஆராயும் வகையில் சாணக்கியன் தலைமையில் களவிஜயம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதன் போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும், கெவிளியாமடுவில் மேய்ச்சல் தரைப்பகுதியில் முன்னெடுக்கப்படும் அத்துமீறிய பயிர்ச்செய்கைகளை பார்வையிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் தலைமையிலான குழுவினர் அங்கு பண்ணையாளர்களுடன் கலந்துரையாடியதுடன் அங்கு அத்துமீறிய பயிர்ச்செய்கையில் ஈடுபடுவோருடனும் கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்பட்டது.
இதேவேளை சட்டவிரோதமாக குடியேறி இருக்கின்றவர்கள் வெளியேற்றப்பட வேண்டும் இது மேய்ச்சல் தரையாக அறிவிக்கப்பட வேண்டும் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்துள்ளார்
மக்களுக்கு அநுர குமார திசாநாயக்க அரசாங்கம் நேர்மையாக நடந்து கொள்ளுகின்ற அரசாங்கம் என நம்பிக்கை வருவதாக மேய்ச்சல்தரைக்காணியில் முன்னெடுக்கப்படும் அத்துமீறிய செயற்பாடுகளை இதனை முதலாவது சவாலாக எதிர்வரும் வாரத்தில் பாராளுமன்றத்தில் என்.பி.பி அரசுக்கு முன்பாக நான் இந்த சவாலை முன்வைக்க தயாராக இருக்கின்றேன் என குறிப்பிட்டுள்ளார்.