யாழ்ப்பாணம் புங்குடுதீவு பகுதியில் உள்ள குளம் ஒன்றிலிருந்து இன்று (18) ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. அப்பகுதியை சேர்ந்த 38 வயதுடைய நபரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இவர் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் வீட்டில் இருந்து வெளியே சென்றுள்ள நிலையில் மீண்டும் வீடு திரும்பாமல் இருந்துள்ளார். இதனால் இவரது உறவினர்கள் இவரை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், இவர் இன்றைய தினம் அப்பகுதியில் உள்ள குளம் ஒன்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த குளத்திற்கு அருகிலிருந்து இவரது துவிச்சக்கர வண்டி மற்றும் ஆவணங்கள் என்பவை பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன.
இது தொடர்பில் ஊர்காவற்துறை பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.