மலேசியா செல்ல தயாராகும் விஜயா மாட்டிக் கொள்வாரா ரோகிணி

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் தொடர்களில் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கிறது சிறகடிக்க ஆசை சீரியல்.

தனது வாழ்க்கையை தக்க வைத்துக்கொள்ள ரோஹினி என்பவர் இல்லாத பொய்கள் கூறி திருமணம் செய்திருக்கிறார்.

அவரைப்பற்றிய உண்மை எப்போது முழுவதும் வெளியாகும் என்ற எதிர்ப்பார்ப்பில் தான் ரசிகர்கள் ஆவலாக காத்துக் கொண்டிருக்கின்றனர்.

கடந்த வாரம் வீட்டிற்கு வந்த மலேசியா ஜோடியிடம் ரோஹினி சிக்குவார் என எதிர்ப்பார்த்தால் அப்படி ஒன்றும் நடக்கவில்லை, வழக்கம் போல் தப்பித்துவிட்டார்.

புரொமோ

தற்போது இந்த வாரத்திற்கான சிறகடிக்க ஆசை புரொமோ வெளியாகியுள்ளது.

அதில் முத்து-மீனா மலேசியா போகலாம் என கூற அண்ணாமலை அதிக செலவு ஆகும் என்கிறார். உடனே முத்து, பார்லர் அப்பா ஊர், அவர் எனக்கு செலவு செய்ய மாட்டாரா என கூற ரோஹினி முகத்தில் பயம் கிளம்புகிறது.

கடைசியில் விஜயாவே நாம் செல்வோம் என கூற ரோஹினி என்ன செய்வது என தெரியாமல் முழிக்கிறார். இதோ சீரியலின் புரொமோ,