ஒன்பது நாட்களில் வணங்கான் படம் செய்துள்ள வசூல்!

இயக்குநர் பாலா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகவிருந்த திரைப்படம் வணங்கான். சில நாட்களில் படப்பிடிப்பு நடந்த நிலையில், இப்படத்திலிருந்து சூர்யா வெளியேறினார்.

அவருக்கு பதிலாக இப்படத்தில் அருண் விஜய் கமிட் செய்யப்பட்டார். பாலா – அருண் விஜய் கூட்டணியில் தொடர்ந்த இப்படம் கடந்த வாரம் திரையரங்கில் வெளிவந்து வெற்றியடைந்துள்ளது.

சமூகத்தில் பெண்களுக்கு எதிராக நடக்கும் கொடுமைகளையும், அதற்கு என்ன தண்டனை கொடுக்க வேண்டும் என்பதை பற்றியும் இப்படம் பேசியது.Latest Tamil movies

வசூல் விவரம்

மக்களிடையே அமோக வரவேற்பை பெற்ற இப்படம் 9 நாட்களை பாக்ஸ் ஆபிஸில் கடந்துள்ள நிலையில், இதுவரை எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, வணங்கான் திரைப்படம் 9 நாட்களில் உலகளவில் ரூ. 8.1 கோடி வசூல் செய்துள்ளது.