நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் முதல் விமர்சனம்

கடந்த ஆண்டு ராயன் படத்தில் இயக்குநராக ஆக்ஷன் கதைக்களத்தில் மிரட்டி இருந்தார் தனுஷ். அதை தொடர்ந்து Rom-Com ஜெனரில் தனுஷ் இயக்கியிருக்கும் திரைப்படம் தான் நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்.

இப்படத்தில் ஹீரோவாக பவிஷ் நாராயணன் அறிமுகமாகியுள்ளார். மேலும் அனிகா, பிரியா வாரியர், மேத்யூ தாமஸ் ஆகியோர் நடித்துள்ளனர். ஜி,வி. பிரகாஷ் இசையமைத்துள்ள இப்படத்திலிருந்து வெளிவந்த பாடல்கள் நல்ல வரவேற்பை பெற்றது.

இப்படம் பிப்ரவரி 7ஆம் தேதி வெளிவரவிருந்த நிலையில், தற்போது பிப்ரவரி 21ஆம் தேதிக்கு தள்ளிப்போய்விட்டது. இதுகுறித்து நேற்று படத்தின் தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியிட்டு இருந்தனர்.

முதல் விமர்சனம்
இந்த நிலையில், ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்புடன் இருக்கும் நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படத்தின் முதல் விமர்சனம் வெளிவந்துள்ளது.

இளம் தயாரிப்பாளர் மற்றும் இயக்குநரான ஆகாஷ் பாஸ்கரன், இப்படத்தை பார்த்துவிட்டு தனது விமர்சனத்தை எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார். இந்த பதிவில் “NEEK படத்தை பார்த்தேன், வாவ் சூப்பர். ஃபீல் குட், க்யூட் ஃபிலிம். கண்டிப்பாக ப்ளாக் பஸ்டர் தான்” என கூறியுள்ளார்.