அமெரிக்காவில் டிக்டொக் செயலிக்கு தடை!

அமெரிக்காவில் சட்ட விதிகளின்படி டிக்டொக் செயலிக்கு விதிக்கப்பட்ட தடை இன்றையதினம் (19-01-2025) முதல் அமலுக்கு வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதன்படி தற்காலிகமாக டிக்டாக் செயலியின் சேவையை நிறுத்துவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. இதனிடையே ஆப்பிள் ஐ ஸ்டோர், கூகுள் பிளே ஸ்டோரிலிருந்து டிக்டாக் நீக்கம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக டிக்டொக் செயலியை அமெரிக்க நிறுவனத்திற்கு விற்பனை செய்தால் இந்த தடை நீக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.