பச்ச மிளகாய் சட்னி என்றால் ரொம்ப பிடிக்குமா? அப்போ இந்த முறையில் செய்து பாருங்கள்

ஆந்திரா உணவுகள் எல்லாமே காரசாசாரதாக தான் இருக்கும். இவர்களின் அனைத்து ரெசிபியிலும் பச்ச மிளகாய் என்பது இடம்பெற்றிருக்கும்.

அந்தளவிற்கு பச்சை மிளகாய் இல்லாமல் எந்த ரெசிபியும் இருக்காது. அனேகமானோர் செய்யும் உணவுகள் இட்லி தோசை தான். இவை சாப்பிட்டால் சட்னி சாம்பார் இல்லாதமல் சாப்பிட முடியாது.

இதற்கு பல வகையான சம்னிகள் செய்வார்கள். ஆனால் இந்த பதிவில் பார்க்கவிருப்பது ஆந்திரா ஸ்டைலில் செய்த மிளகாய் சட்னி தான். இதை எப்படி செய்யலாம் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்
பச்சை மிளகாய் – 150 கிராம்
பூண்டு – 10 பல்
சீரகம் – 1 தேக்கரண்டி
மஞ்சள் – சிறிதளவு
உப்பு – சுவைக்கு ஏற்ப
ஆப்பிள் சைடர் வினிகர் – சிறிதளவு
தேங்காய் எண்ணெய் – 2 டீஸ்பூன்
செய்முறை
ஆந்திர ஸ்டைலில் பச்சை மிளகாயை வைத்து சட்னி செய்வதற்கு முதலில் பச்சை மிளகாயை லேசாக கீறி வைத்துக் கொள்ளவும். பின்னர் ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி அது சூடானதும் கீறி வைத்துள்ள பச்சை மிளகாயை பொன்னிறமாக வரும் வரை நன்கு வதக்க வேண்டும்.

மிளகாயின் நிறம் மாறத் தொடங்கியதும் பூண்டு, மஞ்சள் தூள் மற்றும் சீரகம் சேர்த்து வதக்கிக் கொள்ளவும். இதை ஒரு பாத்திரத்திற்கு மாற்றிய பின்னர் அதே பாத்திரத்தில் சிறதளவு எண்ணெய் ஊற்றி அது சூடானதும் தேங்காய் மற்றும் வேர்க்கடலை சேர்த்து வதக்கிக் கொள்ளவும்.

இவ்வாறு வறுத்து வைத்துள்ள பொருட்கள் அனைத்தையும் மிக்ஸி ஜாரில் போட்டு மையாக அரைத்துக் கொள்ளவும். பின்னர் இதனுடன் சிறிதளவு உப்பு, வினிகர் சேர்த்து லேசாக அரைத்து எடுத்தால் போதும்.

இறுதியாக ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி அது சூடானதும் கடுகு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்தால் காரத்தோடு சுவை சேர்ந்து காரசாரமான பச்சை மிளகாய் சட்னி தயாராகி விடும். இதை இட்லி தோசை சுடு சாதத்தடன் வைத்து சாப்பிட்டால் சுவை அள்ளும்.