கால்சியம் சத்தை வாரி வழங்கும் பனங்கிழங்கு

பொங்கல் தினத்தில் அதிகமானவர்களின் வீடுகளில் இருக்கும் முக்கிய பொருட்களில் ஒன்று தான் பனங்கிழங்கு.

“கற்பகத்தரு” என அழைக்கப்படும் பனை மரம் பல்வேறு பலன்களை தரும் பனங்கிழங்கு பலராலும் விரும்பி உண்ணப்படும் உணவு வகைகளில் ஒன்று.

பனங்கிழங்கில் அளவுக்கு அதிகமாக நார்ச்சத்து இருப்பதால் ரத்த சோகை நோய் வராது என மருத்துவர்கள் பரிந்துரைத்துள்ளனர். அத்துடன், பனங்கிழங்கில் பொட்டாசியம், வைட்டமின் பி1, பி2, பி3 மற்றும் வைட்டமின் சி நிறைந்துள்ளது.

நார்ச்சத்து, கால்சியம் மற்றும் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் உள்ளன. இதில் உள்ள அத்தனை சத்துக்களும் உடலுக்கு தேவையான ஆரோக்கியத்தை வாரி வழங்குகின்றது.

அதிலும் குறிப்பாக பனங்கிழங்கில் இரும்புச்சத்து அதிகமாக இருப்பதால் ஹீமோகுளோபின் அளவு அதிகரித்து ரத்த சோகை பிரச்சினை நோய் வருவது முற்றிலும் தடுக்கப்படுகின்றது.

அந்த வகையில் பனங்கிழங்கு சாப்பிடுவதால் கிடைக்கும் பலன்கள் என்னென்ன என்பது பற்றி தொடர்ந்து எமது பதிவில் பார்க்கலாம்.

பனங்கிழங்கு செய்யும் அற்புதங்கள்
1. பனங்கிழங்கில் கால்சியம் அதிகம் இருப்பதால் மூட்டு வலி மற்றும் முழங்கால் வலிக்கு மருந்தாக பயன்படுகின்றது. அத்துடன் நிறுத்தாமல் எலும்புகளை வலுவாகவும் ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்ளவும் உதவியாக இருக்கின்றது.

2. பனங்கிழங்கில் இருக்கும் நார்ச்சத்து ரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவையும் சர்க்கரை அளவையும் குறைத்து சர்க்கரை நோயாளர்களுக்கு ஆரோக்கியம் தருகின்றது.

3. மெக்னீசியம் நிறைந்திருக்கும் பனங்கிழங்கிற்கு ரத்த அழுத்தம் பிரச்சினையை கட்டுக்குள் வைக்கும் ஆற்றல் உள்ளது. இதனால் இதயம் நோய் சம்பந்தப்பட்ட நோய்கள் வருவது குறைவாக இருக்கும்.

4. நரம்பு பலவீனம், நரம்புகளில் உள்ள அடைப்புகளுக்கும் நிவாரணம் கொடுக்கிறது. அத்துடன் நரம்பு தொடர்பான பிரச்சினைகளும் வருவது குறைவாக இருக்கும்.

5. வைட்டமின் சி இருப்பதால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். பனங்கிழங்கில் உள்ள ஊட்டச்சத்துக்கள் உடலில் உள்ள பாதுகாப்பான வெள்ளை அணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க செய்யும் என ஆய்வாளர்கள் கூறுகின்றார்கள்.

6. பெருங்குடலில் இருக்கும் நச்சுக்களையும் பனங்கிழங்கு வெளியேற்றுகின்றது. அத்துடன் பனங்கிழங்கில் கிளைசெமிக் இண்டெக்ஸ் குறைவாக இருப்பதால் சர்க்கரை நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம். எந்தவித பாதிப்பும் இருக்காது.