ஆற்றில் ஜீப் விழுந்ததில் தம்பதியினர் பலி!

கண்டி, பன்னில, பத்தேகம பாலத்திற்கு அருகில் பிராடோ ஜீப் ஒன்று வீதியை விட்டு விலகி மொரகஹ ஓயாவில் விழுந்ததில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளதுடன், ஒருவர் காணாமல் போயுள்ளார்.

சம்பவத்தில் மற்றொருவர் காயமடைந்து உயிர் தப்பியுள்ளார். பன்வில பொலிஸ் பிரிவில் உள்ள ஹுலுகங்கை-பெத்தேகம சாலையில் நேற்று (20) பிற்பகல் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

விபத்தில் இறந்தவர்கள் பத்தேகம, தவலம் தானேயில் வசித்து வந்த ஓய்வுபெற்ற பள்ளி முதல்வரான 82 வயதான கபுருகெட்டியே பிரேமசுந்தர மற்றும் 77 வயதான ஆர்.ஜி. கருணாவதி ஓய்வு பெற்ற ஆசிரியை.

இந்நிலையில் ஜீப்பின் ஓட்டுநரைக் காணவில்லை என கூறப்படும் நிலையில், போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.