இந்த ராசி பெண்கள் பல முகம் கொண்டவர்களாம் இவர்களிடம் கவனமாக இருங்கள்

ஒருவர் பிறக்கும் ராசி மற்றும் நட்சத்திரத்துக்கும் அவர்களின் எதிர்கால வாழ்க்கை மற்றும் விசேட குணங்களுக்கும் இடையில் நெருங்கிய தொடர்பு காணப்படுதாக ஜோதிட சாஸ்திரத்திரம் குறிப்பிடுகின்றது.

அந்த வகையில் குறிப்பிட்ட சில ராசிகளில் பிறந்த பெண்கள் இயல்பாகவே தங்கள் மற்றவர்களிடம் வெளிக்காட்டும் அளவுக்கு நல்லவர்களாகவும் உண்மையானவர்களாகவும் இருக்க மாட்டார்களாம்.

இப்படி வெளித்தோற்றத்துக்கு புறம்பான எதிர்மறை குணங்களை அதிகம் கொண்டிருக்கும் பெண் ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.

மிதுனம்

மிதுன ராசிக்காரர்கள் இயல்பாகவே இரட்டை இயல்புக்கு பெயர் பெற்றவர்களாக இருப்பார்கள். இவர்கள் தங்களின் உள்ளுணர்வுகளை யாரிடமும் பகிர்ந்துக்கொள்ள மாட்டார்கள்.

ஆனால் இவர்கள் தங்களின் அதிக புத்திசாலித்தாலும் அன்பான நடத்தையாலும் மற்றவர்களை விரைவில் வசீகரிக்கும் தன்மையை கொண்டிருப்பார்கள்.

இந்த ராசி பெண்கள் மனதில் ஒன்றை வைத்துக்கொண்டு வெளியில் ஒன்றை பேசும் குணத்தை கொண்டிருப்பதால், இவர்களின் வார்த்தைகளை நம்புவது சில சமயங்களில் சவால் மிக்கதாக அமையும்.

இவர்களின் இரட்டை இயல்பு சில நேரங்களில் அவர்களின் மோசமான பக்கத்தை மற்றவர்களுக்கு வெளிப்படுத்துவதாக அமைந்துவிடும்.

துலாம்

துலாம் ராசியில் பிறந்த பெண்கள் வசீகரமான தோற்றத்தையும் காந்தம் போல் மற்றவர்களை கவரும் கூர்மையாக பார்வையையும் கொண்டவர்களாக இருப்பார்கள்.

இந்த ராசி பெண்கள் ராஜதந்திர இயல்புக்கு பெயர் பெற்றவர்களாக இருப்பார்கள். தங்களின் எண்ணங்களையும் தேவைகளையும் வெற்றிக்கொள்ள பல வேடங்களில் நடித்து காரியத்தை சாதித்துக்கொள்வார்கள்.

இவர்கள் தங்களின் ஆசைகளையும் உணர்வுகளையும் பெரும்பாலான தருணங்களில் மறைத்து வைக்கும் குணம் கொண்டவர்களாக இருப்பார்கள்.

மேஷம்

மேஷ ராசியில் பிறந்த ஆண்கள் துணிச்சலான ஆளுமைகளுக்கு பெயர் பெற்றவர்களாகவும் தலைமைத்துவ ஆற்றல் நிறைந்தவர்களாகவும் இருப்பார்கள்.

இவர்கள் தங்களின் நிலையை தக்கவைத்துக்கொள்ள வெளித்தோற்றத்திற்கு எல்லா சூழ்நிலையிலும் நல்லவர்களாக இருப்பார்கள்.

அவர்களின் உணர்ச்சிவசப்பட்டும் சந்தர்பங்களுயும் கூட மற்றவர்களிடமிருந்து மறைத்துக்கொள்ளும் குணம் இவர்களிடம் இருக்கும்.

இவர்கள் எப்படிப்பட்டவர்கள் என புரிந்துக்கொள்வது நெருங்கி பழகுபவர்களுக்கும் கூட சில சமயம் கடினமாக இருக்கலாம்.