ஒன்றரை வருடங்களாக நீடித்த இஸ்ரேல் – ஹமாஸ் போரின் பின், இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையேயான போர்நிறுத்த ஒப்பந்தத்தின் கீழ் 90 பலஸ்தீன பணயக்கைதிகள் விடுவிக்கப்பட்டுள்ளதாக இஸ்ரேலிய சிறைச்சாலை சேவை அறிவித்துள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.
நேற்று (19) ஆரம்பமான போர்நிறுத்த காலத்தின் கீழ் முதற்கட்டமாக இந்த பலஸ்தீன கைதிகள் விடுவிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
விடுவிக்கபப்ட்ட கைதிகளில் 69 பெண்களும் 21 ஆண்களும் அடங்குவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை, ஹமாஸின் பிடியில் இருந்த மூன்று இஸ்ரேலிய பிணைக் கைதிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அந்த தகவல்கள் கூறுகின்றன.
அதேவேளை விடுவிக்கப்பட்ட பலஸ்தீன பணயக்கைதிகளை உறவினர்கள் கண்ணீருடன் கட்டியணைத்து வரவேற்கும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.