கனடா மிசிசாகா வாகன விபத்தில் ஒருவர் பலி!

கனடாவின் மிசிசாகாவில் இடம் பெற்ற வாகன விபத்தில் நபர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.

தனி ஒரு வாகனம் இன்றைய தினம் காலை விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்படுகிறது.

பிக்சி மற்றும் டெறி வீதிகளுக்கு அருகாமையில் இன்று அதிகாலை வேளையில் இந்த வாகன விபத்து இடம் பெற்றுள்ளது.

சுமார் 20 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவரே இவ்வாறு சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் அறிந்து கொண்ட உயிர் காப்பு பணியாளர்கள் விபத்துக்குள்ளானவருக்கு முதலுதவி வழங்கியதாக தெரிவிக்கப்படுகிறது.

முதலுதவிகள் மூலம் விபத்துக்குள்ளானவரை காப்பாற்ற முடியவில்லை என போலீசார் தெரிவிக்கின்றனர்.

இந்த வாகன விபத்து சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

சம்பவத்தில் உயிரிழந்த நபரின் ஆள் அடையாள விபரங்களோ, விபத்துக்கான காரணங்கள் குறித்தும் தகவல்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.