காமெடி கிங் என அழைக்கப்படும் நடிகர் சந்தானத்தின் சொத்து மதிப்பு விவரங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.
சந்தானம்
சின்னத்திரையில் களமிறங்கி சாதிக்க துடிக்கும் கலைஞர்களுக்கு ஒரு உதாரணமாக இருப்பவர் நடிகர் சந்தானம்.
பிரபல தொலைக்காட்சியில், “லொள்ளு சபா” மூலம் அதிகம் பிரபலமான இவர் அப்படியே வெள்ளித்திரைக்கு வந்து தனது காமெடி மூலம் மக்கள் மனதில் இடம் பிடித்தார்.
காமெடியனாக இருந்தவர் காலப்போக்கில் கதாநாயகராக மாறி விட்டார். இவரது நடிப்பில் வெளியான DD Returns திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றதை தொடர்ந்து பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார்.
இத்தனை கோடியா?
இந்த நிலையில் நடிகர் சந்தானம் இன்றைய தினம் அவருடைய 45வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.
இந்த தினத்தை முன்னிட்டு அவரின் சொத்து மதிப்பு விவரங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.
அந்த வகையில், ஒரு படத்தில் ஹீரோவாக நடிக்க ரூ.15 கோடி வரை சம்பளம் வாங்குவதாகவும். இவரின் மொத்த சொத்து மதிப்பு ரூ. 80 முதல் ரூ. 90 கோடி வரை இருக்கும் எனவும் கூறப்படுகிறது.
இந்த செய்தி சந்தானம் ரசிகர்களின் கவனத்திற்கு சென்றுள்ளது.