பொதுவாக பெண்கள் தங்களின் முக அழகை பாதுகாப்பதற்காக சந்தையில் கிடைக்கும் க்ரிம்களை வாங்கி பயன்படுத்துவார்கள்.
இவை ஆரம்ப காலங்களில் நல்ல பலன்களை கொடுத்தாலும் நாட்கள் செல்ல செல்ல பக்க விளைவுகளை ஏற்படுத்தும். ஏனெனின் சந்தையில் விற்பனை செய்யும் க்ரிம்களில் அதிகளவு இரசாயனங்கள் சேர்க்கப்படுகின்றன. இது போன்ற க்ரீம்கள் விலை அதிகமாக இருக்கும்.
இதற்காகவே, இரசாயனம் கலக்காத வீட்டில் செய்யக் கூடிய க்ரீம்களை தயாரித்து பயன்படுத்தலாம்.
அந்த வகையில் மிதமாக இருக்கும் ஆரஞ்சி பழ தோலை வைத்து எப்படி க்ரிம் செய்யலாம் என்பதனை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
ஆரஞ்சி பழ தோல்கள்
தண்ணீர்- தேவையான அளவு
அரிசி மாவு- ஒன்றரை ஸ்பூன்
மஞ்சள் தூள்- கால் ஸ்பூன்
தேங்காய் எண்ணெய்- சிறிதளவு
தேன் – சிறிதளவு க்ரிம்
தயாரிக்கும் முறை
ஒரு பாத்திரத்தில் தேவையான அளவு ஆரஞ்சு பழ தோல்களை போட்டு, அவை நீரில் முழ்கும் வரை தண்ணீர் ஊற்றவும்.
அதன் பின்னர் பாத்திரத்தை மூடி தண்ணீருடன் கொதிக்க விடவும். சிறிது நேரத்திற்கு பின்னர் பார்க்கும் பொழுது தண்ணீரின் நிறம் மாறும். இந்த தண்ணீர் ஆறியதும் ஒரு பாட்டிலில் ஸ்டோர் செய்து வைக்க வேண்டும்.
இதனை தொடர்ந்து இன்னொரு பாத்திரத்தில் ஒன்றரை ஸ்பூன் அரிசி மாவு, கால் ஸ்பூன் மஞ்சள் தூள், சிறிதளவும் செக்கில் ஆட்டிய தேங்காய் எண்ணெய் மற்றும் கொதிக்க விட்டு எடுத்து ஆரஞ்சு தண்ணீர் ஆகியவற்றை பசை பதத்திற்கு நன்றாக கலந்து விடவும்.
அதன் பின்னர், இறுதியாக தேவையான அளவு தேன் சேர்த்து சுத்தமான முகத்திற்கு அந்த க்ரீமை தடவ வேண்டும். இதைத் தொடர்ந்து, சுமாராக 5 நிமிடங்கள் கழித்து முகத்தை கழுவி விடலாம். இப்படி செய்தால் வந்தால் முகம் பொலிவாக இருக்கும்.
இதனை வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று தடவைகள் செய்யலாம். ஏதாவது பக்க விளைவுகள் இருந்தால் உரிய மருத்துவரை நாடி ஆலோசனைகள் பெற்றுக் கொள்வது சிறந்தது.